ஜனநாயகத்தை காக்க குரல் கொடுங்கள் – ராகுல் காந்தி
ஜனநாயகத்தை காக்க குரல் கொடுங்கள் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
ராகுல் காந்தி இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள காணொளியில் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காணொளியில் மேலும் தெரிவித்துள்ள அவர், “இன்று ஒட்டுமொத்த நாடும் கொரோனா வைரசுக்கு எதிராக போராடி வரும் சூழலில், பா.ஜகவோ அரசியலமைப்பை சிதைத்து, ஜனநாயகத்தை அழிக்கும் செயலில் இறங்கியுள்ளது.
ராஜஸ்தானில் மக்களால் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசை, சதி செய்து கவிழ்க்கும் முயற்சியில் பா.ஜ.க இறங்கியுள்ளது. மத்திய பிரதேசத்தில் செய்ததைபோல், தற்போது ராஜஸ்தானிலும் ஜனநாயக படுகொலையை அரங்கேற்றுகிறது.
ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை கவிழ்ப்பதை பா.ஜ.க நிறுத்திக்கொள்ள வேண்டும். எங்கள் அரசியலமைப்பு உரிமைகளை மதித்து உடனடியாக சட்டசபையை கூட்ட வேண்டும் என கோருகிறோம். எங்களுடன் இணைந்து ஜனநாயகத்துக்காக குரல் கொடுங்கள்” என வலியுறுத்தியுள்ளார்.
பகிரவும்...