சுதந்திரமான- நியாயமான தேர்தல் முடிவுகளை ட்ரம்ப் ஏற்றுக்கொள்வார்: வெள்ளை மாளிகை
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் முடிவுகளை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏற்றுக்கொள்வார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
முன்னதாக வாக்களிக்கும் முறை குறித்து கடுமையான புகார்களை தொடர்ந்து தெரிவித்து வந்த ட்ரம்ப், தேர்தலில் தோல்வியுற்றால் அமைதியான முறையில் பதவி விலகப்போவதில்லை என கூறியிருந்தார்.
இது பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருந்த நிலையில், இதுகுறித்து வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கெய்லீ மெக்கானி ஊடகங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘சுதந்திரமான நியாயமான தேர்தல் முடிவுகளை ஜனாதிபதி, ஏற்றுக்கொள்வார்.
ஆனால் உங்கள் கேள்வி ஜனநாயக கட்சி இடம் கேட்கப்படுவது மிகவும் பொருத்தமானது என்று நான் நினைக்கிறேன்.
அவர்கள் ஏற்கனவே தேர்தல் முடிவுகளை ஏற்கமாட்டோம் என பலமுறை தெரிவித்துள்ளனர்’ என கூறினார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி நடைபெறுகின்றது. இதில் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குடியரசு கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடன் போட்டியிடுகிறார்.