Main Menu

எஸ்.பி.பாலசுப்ர மணியத்தின் மறைவுக்கு காஞ்சி ஸ்ரீசங்கர மடம் இரங்கல்

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மறைவுக்கு காஞ்சி ஸ்ரீசங்கர மடம் இரங்கல் தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

காஞ்சி ஸ்ரீசங்கர மடம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இசையுலகின் ஒப்பற்ற நாயகனாக விளங்கிய எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மறைவு இசை உலகில் மட்டுமல்லாது அனைத்து மக்களுக்குமே மிகுந்த வருத்தத்தை அளிக்கக் கூடியது.

திரை இசைக்கு அப்பாற்பட்டு ஆன்மீகத்திலும் பற்று கொண்டவராய் விளங்கி வந்தார். பல தெய்வபக்தி பாடல்களும், பலவிதமான ஸ்தோத்திரப் பாடல்களும் மிகச் சிறந்த முறையில் பாடி மக்களிடம் பக்தி மணம் பரப்பியவர்.

காஞ்சி மடத்தின் மீதும் ஸ்ரீ ஆச்சார்ய ஸ்வாமிகள் மீதும் ஆழ்ந்த பக்தியும் மிகுந்த மரியாதையும் கொண்டு சுவாமிகளின் அபிமானத்துக்கு பாத்திரமாக விளங்கினார்.

அவரை இழந்த வருத்தத்திலிருக்கும் குடும்பத்துக்கு மன அமைதி கிடைக்க வேண்டி, மஹாதிரிபுரசுந்தரி சமேத ஸ்ரீசந்திரமௌலீஸ்வரை பிரார்த்திக்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் காலமான பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல், நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணைத் தோட்டத்தில் இன்று (சனிக்கிழமை)  நல்லடக்கம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...