Main Menu

ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தான் பிரதமர் பேச்சை கண்டித்து இந்தியா வெளிநடப்பு

ஐக்கிய நாடுகள் பொதுசபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசத் தொடங்கிய சிறிது நேரத்தில் அவரது உரையை கண்டித்து இந்திய பிரதிநிதி வெளிநடப்பு செய்துள்ளார்.

அமெரிக்கா- நியூயோர்க் நகரில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 74ஆவது கூட்டம் கடந்த 24ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற கூட்டத்தில்,  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்  உரையாற்றியுள்ளார்.

குறித்த கூட்டத்தில் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளதாவது, “சர்வதேச சட்டரீதியின் அடிப்படையில் ஜம்மு-காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படும் வரை தெற்காசியாவில்அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை இருக்காது.

மேலும், பாதுகாப்பு சபையில் ஒரு பேரழிவு மோதலைத் தடுக்க வேண்டும். கிழக்கு திமோர் விடயத்தில் செய்ததைப் போலவே அதன் சொந்த தீர்மானங்களை செயற்படுத்த வேண்டும்.

இந்தியா 370வது அரசியலமைப்பு சட்டப்பிரிவை இரத்து செய்து, காஷ்மீர் பிராந்தியத்தில் உள்ள துருப்புக்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது” என அவர் விமர்சித்துள்ளார்.

இவ்வாறுபோர் பதற்றத்தை தூண்டும் வகையில் இம்ரான் கான் பேசியதைக் கண்டித்து, இந்திய பிரதிநிதி மிஜிடோ வினிடோ பொதுசபை மண்டபத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.

இதேவேளை இம்ரான் கானின் உரையானது, இராஜதந்திர ரீதியாக குறைவாக இருப்பதாக ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி திருமூர்த்தி கண்டனம் தெரிவித்தார். மேலும், இதற்கு ஐ.நா.சபையில் பதில் அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

பகிரவும்...