Main Menu

சீனாவுக்கு எதிராக இந்தியாவைத் தூண்டிவிடும் அமெரிக்கா- ரஷ்யா குற்றச்சாட்டு

சீனாவுக்கு எதிராக அமெரிக்காவும் ஏனைய மேற்கத்தேய நாடுகளும் இந்தியாவைத் தூண்டிவிடுவதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.

ரஷ்ய சர்வதேச விவகார சபைக் கூட்டத்தில் காணொளி தொடர்பாடல் மூலம் பேசிய அந்நாட்டு வெளியுவுத்துறை அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தோ-பசிபிக் நாடுகளைக் கொண்ட குவாட் அமைப்பை ஊக்குவிப்பதன் மூலம் சீன எதிர்ப்பு விளையாட்டுகளில் இந்தியாவை ஈடுபடுத்த முயற்சிப்பதாக அவர் கூறியுள்ளார்.

இதற்கு ரஷ்யா, சீனா அடிபணிய வாய்ப்பு இல்லை என்றும் இந்தோ-பசிபிக் யுக்தியை எதிர்ப்பதில் ரஷ்யா தொடர்ந்து நிலைத்திருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.