சிரியாவின் இராணுவ இலக்குகளை குறிவைத்து இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல்!
சிரியாவின் இராணுவ இலக்குகளை குறிவைத்து, இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன.
தலைநகர் டமாஸ்கஸ் அருகே உள்ள இராணுவ சாவடிகளில் சேதாரம் ஏற்பட்டதாக கூறிய சிரியாவின் அரசு ஊடகம், எந்தவிதமான சேதம் என்று குறிப்பிடவில்லை.
இந்த தாக்குதல், குண்டு வைக்கும் முயற்சிக்கான பதிலடி இது என்று இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் கூறியுள்ளன.
முன்னதாக, கோலன் ஹைட்ஸ் பகுதியில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள பகுதியில் குண்டு வைக்க முயன்ற நால்வரை கொன்றதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்திருந்தது. இதற்கு பதிலடியாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் இராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் ஜொனாதன் கான்ரிகஸ் கூறுகையில், “எந்த அமைப்பு இந்த குண்டு வைப்பு வேலையில் ஈடுபட்டது என்பதை இவ்வளவு சீக்கிரம் சொல்ல முடியாது. ஆனால், இதற்கு சிரியா அரசே பொறுப்பு” என கூறியுள்ளார்.