Main Menu

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கை விசாரிக்கை சி.பி.ஐ. ஒப்புதல்

சாத்தான்குளத்தில் பொலிஸாரால் தாக்கப்பட்டு தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான வழக்கை விசாரிக்கை சி.பி.ஐ. ஒப்புதல் அளித்துள்ளது.

சாத்தான்குளத்தில் கைது செய்யப்பட்ட தந்தை, மகன் பொலிஸாரின் விசாரணையின் போது தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த வழக்கு சிபிஐ மூலம் விசாரிக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார். அதற்கான கோரிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் முதலமைச்சர் நேரடியாக விடுத்திருந்தார்.

இதற்கிடையில், சிபிஐ விசாரணையை தொடங்கும் வரை சிபிசிஐடி விசாரிக்கும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்தது. அதன்படி விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி, இதுவரை 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

இந்த நிலையில், குறித்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்த ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது

பகிரவும்...
0Shares