கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்குமாறு இந்தியா வலியுறுத்து!
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான காரணம் மற்றும் அது பரவியமை குறித்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பிடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பிலான விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தியிருந்த நிலையில் தற்போது இந்தியாவும் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவின் லடாக் பகுதியில் சீன இராணுவம் அத்துமீறிய தாக்குதல்களை ஏற்படுத்தி வருவதனால், சீனாவுக்கு எதிரான அழுத்தத்தை இந்திய அரசு மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை சீனாவால்தான் இந்த வைரஸ் பரவியது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.