குளிர்கால மலிவு விற்பனை ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு
இவ்வருடத்துக்கான குளிர்கால மலிவு விற்பனை (les soldes d’hiver) ஆரம்பிக்கும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஜனவரி 12 ஆம் திகதி புதன்கிழமை காலை 8 மணிமுதல் இந்த மலிவு விற்பனை ஆரம்பமாகின்றது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தின் இரண்டாவது புதன்கிழமை குளிர்கால மலிவு விற்பனை ஆரம்பிக்கப்படும். அதேபோன்று இவ்வருடம் இரண்டாவது புதன்கிழமை ஆரம்பிக்கப்படுகின்றது.
இந்த மலிவு விற்பனை நான்கு வாரங்கள் வரை தொடரும். பல நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 75% வீதம் வரை விலைக்கழிவு வழங்க உள்ளன.
கடந்தவருடம் கொரோனா பரவல் காரணமாக இந்த குளிர்கால மலிவு விற்பனை பெரிதளவில் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.