கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு (வ/கனகராயன் குளம்)
TRT சமூகப்பணி ஊடாக லண்டனை சேர்ந்த Dr.ரவி ரஞ்சனி தம்பதிகளின் புதல்வன் சஞ்சீவன் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் வ/கனகராயன் குளம் மகாவித்தியாலயத்தில் பல்கலைக்கழ மாணவன் திரு அனோஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் கனகராயன் குளம் பகுதியை சேர்ந்த வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ சிவசக்தி ஆனந்தன் மற்றும் முன்னாள் மாகாணாசபை உறுப்பினர் ம.தியாக ராசா மற்றும் வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினரான கெளரவ ஜெயரூபன் மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினரான கெளரவ சசிதரன் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
ஒவ்வொருவருடமும் TRT வானொலியின் சமூகப்பணியின் ஊடாக அதற்கு பொறுப்பான திரு திரவியநாதன் ஐயா அவர்களின் ஏற்பாட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழுகின்ற மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...