Main Menu

உள்ளாட்சி தேர்தலை தற்போது நடத்த இயலாது – சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தகவல்

உள்ளாட்சி தேர்தலை தற்போது நடத்த இயலாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

உள்ளாட்சி தேர்தலை தற்போது நடத்த இயலாது – சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தகவல்
புதுடெல்லி:

உள்ளாட்சி தேர்தலை நடத்தக் கோரும் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தமிழக அரசு இன்று ஒரு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.

அதில், வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் இந்திய தேர்தல் ஆணையத்திடமிருந்து வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையத்தில் பெற முடியவில்லை. எனவே உள்ளாட்சி தேர்தலை தற்போது நடத்த முடியாத சூழ்நிலை உள்ளது.

தூய்மை காவலர்கள் திட்டத்தின் மூலம் தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடிநீர், மின்சார விநியோகம், தெருவிளக்குகளை சரிசெய்தல், சுகாதாரப் பணி உள்ளிட்டவைகளுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளது.