Main Menu

இந்தியாவில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 72 இலட்சத்தை கடந்தது!

இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 63 ஆயிரத்து 517 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 72 இலட்சத்து 37 ஆயிரத்தை கடந்துள்ளது.

அத்துடன் 723 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 10 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் 62 இலட்சத்து 98  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

8 இலட்சத்து 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.