அமெரிக்கா மினியாபோலிஸில் ஒரே இரவில் 12 பேர் மீது துப்பாக்கிசூடு
அமெரிக்காவின் மினியாபோலிஸில் ஒரே இரவில் நடந்த கைகலப்பில், 12 பேர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை ஹென்னெபின் அவென்யூ தெற்கின் 2900 தொகுதிகளில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாக மினியாபோலிஸ் பொலிஸ் துறை தெரிவித்துள்ளது.
கடந்த மாதத்திலிருந்து சேதத்தை சரிசெய்து முடித்த வீதியில் உள்ள கடைகள் உள்ளிட்ட மதுபான சாலைகள், உணவகங்கள் மற்றும் சில்லறை விற்பனை கடைகள் உள்ள நகரின் நவநாகரீக அப்டவுன் சுற்றுப்புறத்தில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.
அங்குள்ள பெரும்பாலான கடைகள் உடைக்கப்பட்டன. குறிப்பாக கடைகளில் வெளிப்புறங்களில் உள்ள கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன.
இதில் ஒருவர் உயிரிழந்ததோடு, 11 பேர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், இந்த சம்பவம் தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை என்பதோடு, இதற்கான நோக்கம் தெளிவாக இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பேஸ்புக்கில் வெளியான காணொளியில், மக்களின் அலறல் சத்தமும், அழுகை குரலும் கேட்கிறது. உள்ளூர் மக்கள் மருத்துவனைக்கு கொண்டு செல்லப்படுவதும், அந்த இடத்தில் இரத்தம் சிதறி கிடப்பதும் தெரிகிறது. இது, இனவெறி போராட்டத்துக்கு எதிரானவர்களால் நடத்தப்பட்ட தாக்குதலாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் உள்ள மினியோபோலிசில் கடந்த மாதம் ஜோர்ட் ஃபிளாய்ட் என்பவர் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்கு போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...