Main Menu

போர்பரி பூங்காவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் – உயிர் இழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி

இங்கிலாந்தின் ரீடிங் நகரிலுள்ள போர்பரி பூங்காவில் இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தில் உயிரிழந்த மூவருக்காக இன்று (திங்கட்கிழமை) ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

போர்பரி பூங்காவில் நேற்று முன்தினம் சனிக்கிழமை பூங்காவில் கூடியிருந்தவர்களை நோக்கி ஒரு இளைஞன் கைத்தியால் சரமாரியாக தாக்குதல் நடத்தினான்.

இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்ததோடு மேலும் 03 பேர் படுகாயமடைந்த நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 25 வயது இளைஞன் ஒருவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டான்.

இந்நிலையில் குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் வகையில் லண்டனுக்கு மேற்கே 40 மைல் தொலைவில் உள்ள இடத்தில் இன்று 0900 GMT க்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படும் என ரீடிங் நகர மேஜர் அறிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தனது முகநூல் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...