அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தை நாடும் ஈரான்!
அமெரிக்காவின் பொருளாதார தடையால் துவண்டு போயுள்ள ஈரான், சர்வதேச நீதிமன்றத்தை நாடியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையில் மீண்டும் ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிக்கக் கோரியுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பொம்பியோ தெரிவித்ததன் பின்னணியில், சர்வதேச நீதிமன்றத்திடம் ஈரான் முறையிட்டுள்ளது.
‘அமெரிக்காவின் பொருளாதாரத் தடை எங்கள் நாட்டின் பொருளாதாரம் மற்றும் லட்சக்கணக்கான மக்களைக் கொல்கிறது’ என்று ஈரான் தெரிவித்துள்ளது.
மேலும் ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே 2018ஆம் ஆண்டு நடந்த உடன்படிக்கையை அமெரிக்கா மீறுகிறது என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக இரு தரப்பு வாதங்களை இவ்வாரம் சர்வதேச நீதிமன்றம் விசாரிக்கிறது.
அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாபதி தேர்தலுக்கு முன்னர் தென்னாபிரிக்காவுக்கான அமெரிக்கத் தூதரைக் கொலை செய்ய ஈரான் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இதனைத் தொடர்ந்து ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
பகிரவும்...