Main Menu

Versailles : 40,000 யூரோக்களுக்கு ஏலத்தில் விற்பனையான காலணி

Versailles நகரில் இடம்பெற்ற ஏலம் ஒன்றில் காலணி ஒன்று 40,000 யூரோக்களுக்கு விற்பனையாகியுள்ளது.  22.5 செ.மீ நீளம் கொண்ட இந்த காலணி இராணி Marie-Antoinette ( la reine Marie-Antoinette) இன் உடையது. 4.7 செ.மீ உயரம் கொண்டது இந்த காலணி.  Versailles  நகரில் உள்ள  Osenat ஏல விடுதியினால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஏலத்தில், குறித்த காலணி 8000 யூரோக்களில் இருந்து 10000 யூரோக்கள் வரை விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், அனைவரும் ஆச்சரியப்படும் விதத்தில் 43,750 யூரோக்களுக்கு விற்பனையானது.  பின்னால் ஒற்றைக் குதிக்கால் கொண்ட இந்த காலணியில், முன் பக்கத்தில் துணியினால் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

பகிரவும்...