Main Menu

கணவனின் சவக்குழிக்குள் விழுந்த மனைவி

பெண் ஒருவர் சவக்குழிக்குள் மாட்டிக்கொண்ட சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   Troyes (Aube) நகரில் வசிக்கும் 77 வயதுடைய பெண் ஒருவர் தனது கணவரின் இழப்பில் நீண்ட வருடங்கள் வாழ்ந்துள்ளார். வியாழக்கிழமை மாலை அவரது நினைவு தினம் என்பதால் மாலை 5 மணி அளவில் மலர்கொத்துகளோடு அவர் தனது கணவர் புதைக்கப்பட்டிருந்த மயானத்துக்குச் சென்றுள்ளார்.  கணவரின் உடல் புதைக்கப்பட்டுள்ள இடத்தின் மேல் அவர் அமர்ந்து கண்ணீர் மல்க அழுதுள்ளார். அப்போது எதிர்பாராத சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.  மனைவியின் பாரம் தாங்காமல் கணவரது நினைவு கட்டிடம் உடைந்துள்ளது. குறித்த 77 வயதுடைய மனைவி 3 மீற்றர் ஆழம் கொண்ட சடலம் புதைக்கப்பட்டிருந்த குழிக்குள் விழுந்துள்ளார்.  யாரும் இல்லா மயானத்தின் அவர் குழிக்குள் விழுந்ததை எவரும் கவனிக்கவில்லை.  உதவி கோரி கத்தியுள்ளார். அருகில் வசிப்பவர்கள் இந்த குரலை கேட்டபோதும், ‘முதலில் அது வீதியில் இருந்து வருவதாக’ நினைத்துக்கொண்டதாகவும், மறுநாள் காலையே ‘அந்த சத்தம் மயானத்தில் இருந்து’ வருவதை உணர்ந்துள்ளதாகவும் அருகில் வசிப்பவர்கள் தெரிவித்தனர்.  பின்னர் மறுநாள் காலை 11 மணிக்கு உதவிக்குழுவினர் அழைக்கப்பட்டனர்.  மயானத்துக்கு வந்த தீயணைப்பு படையினர், மூன்று மீற்றர் ஆழம் கொண்ட குழிக்குள் சிக்கியிருந்த அப்பெண்ணை காப்பாற்றினர். அவர் மிகுந்த காயமடைந்திருந்ததாகவும், சோர்வடைந்திருந்ததாகவும் தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.  கிட்டத்தட்ட 19 மணிநேரங்கள் அப்பெண் குழிக்குள் சிக்கியிருந்ததாக தீயணைப்பு படையினர் தெரிவித்தனர். 

பகிரவும்...