Facebook பதிவுகளை அலசி ஆராய்பவர்கள் யார்?
Facebookஇல் ஒவ்வொரு நொடியும் பதிவேற்றம் செய்யப்படும் பதிவுகளைச் சல்லடை போட்டுப் பிரிவுகளாகப் பிரிக்கின்றன உலகெங்கும் உள்ள நூற்றுக்கணக்கான நிறுவனங்கள்.
அத்தகைய நிறுவனங்களில் ஒன்று இந்தியாவின் ஹைதராபாத் நகரில் அமைந்துள்ள விப்ரோ.
அதில் பணிபுரியும் சுமார் 260 ஊழியர்கள் நாள்தோறும் படங்கள், காணொளிகள், பதிவுகள் எனப் பயனீட்டாளர்கள் பதிவு செய்பவற்றைப் பார்த்து அவற்றை வெவ்வேறு பிரிவுகளாகத் தொகுக்கின்றனர்.
பயனீட்டாளர்களின் பழக்க வழக்கங்களைக் கணித்துத் தகவல்களைத் திரட்டி எதிர்காலத்தில் அவர்களுக்குப் புதிய சேவைகளை வழங்க முனைகிறது Facebook.
ஒவ்வொரு பதிவையும் பிரிப்பதற்கு முன்னர் Facebook முன்வைத்துள்ள கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்.
தனிநபர், கட்டடங்கள், நினைவுச்சின்னங்கள், உணவு, விலங்குகள், பெரியவர்கள், பதின்ம வயதினர், இயற்கை போன்ற வெவ்வேறு பிரிவுகளில் பதிவுகள் அடையாளம் காணப்படுகின்றன.
வாழ்க்கையில் நடைபெறும் பெரிய நிகழ்வுகள், கருத்துகள், உணவுகள் போன்ற பிரிவுகளாகவும் பதிவுகள் வகைப்படுத்தப்படுகின்றன.