இந்தியா
இந்திய – சீன இராணுவத்தினருக்கு இடையில் மீண்டும் மோதல்!
இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள எல்லைப் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முற்பட்டதாக இந்தியச் செய்திகள் தெரிவித்துள்ளன. இதன்போது, இரு தரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதில் சீனத் தரப்பில் 20 வீரர்களும் நான்கு இந்திய வீரர்களும் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியமேலும் படிக்க...
சசிகலாவின் உடல்நிலை நல்ல முன்னேற்றத்துடன் சீராக உள்ளது- வைத்தியசாலை நிர்வாகம்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்றுவரும் சசிகலாவின் உடல்நிலை நல்ல முன்னேற்றத்துடன் சீராக உள்ளதென பெங்களூர் விக்டோரியா அரச வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெங்களூர் விக்டோரியா அரச வைத்தியசாலையில் சசிகலா சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்துமேலும் படிக்க...
உத்தராகண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதல்வராக 19 வயது மாணவி
உத்தராகண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதல்வராக 19 வயது ஷிருஷ்டி கோஸ்வாமி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) செயற்பட உள்ளார். ஹரித்துவார் மாவட்டத்தில்- தவுலதாப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் 19 வயதான மாணவி ஷிருஷ்டி கோஸ்வாமி, ரூர்கியில் அமைந்துள்ள கல்லூரியில் பி.எஸ்.சி வேளாண்மை பயின்று வருகிறார். மேலும்மேலும் படிக்க...
விவசாயிகள் சங்கத் தலைவர்கள் நால்வரைக் கொல்ல சதி- விவசாயிகள் குற்றச்சாட்டு!
விவசாயிகள் சங்கத்தின் தலைவர்களில் நால்வரைக் கொன்று, டிரக்டர் பேரணியில் பெரும் குழப்பத்தையும், சீர்குலைவையும் உருவாக்க சதித்திட்டம் நடப்பதாக விவசாயிகள் சங்கத்தினர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி கடந்த 50 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் டெல்லி எல்லையில்மேலும் படிக்க...
சசிகலாவை தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி!

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகளாக சிறைதண்டனை பெற்று வரும் இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சசிகலாவுக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சசிகலாவுடன் கூடவே இருந்த இளவரசிக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அதற்கான முடிவுகள்மேலும் படிக்க...
பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி: குடியரசு தின பேரணி நடக்கும்- விவசாயிகள் அறிவிப்பு
விவசாய சங்கங்கள் மற்றும் மத்திய அரசுக்கு இடையிலான 11ஆவது கட்டப் பேச்சுவார்த்தை எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில் தோல்வியடைந்துள்ளது. இந்நிலையில், குடியரசு தினத்தில் திட்டமிட்டபடி டிரக்டர் பேரணி முன்னெடுக்கப்படும் என விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். வேளாண் சட்டங்களை இரத்துச் செய்யக்கோரிமேலும் படிக்க...
சசிகலா கடுமையான நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப் பட்டுள்ளார் – வைத்திய நிர்வாகம்
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல் கடுமையாக இருப்பதாக பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை தெரிவித்துள்ளது. இது குறித்து வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது, “ கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல் கடுமையாக இருக்கிறது. சசிகலா அதிதீவிர நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.மேலும் படிக்க...
பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் கால அவகாசம்!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனின் விடுதலை தொடர்பாக முடிவு எடுப்பதற்கு ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் ஒரு வாரம் அவகாசம் வழங்கியுள்ளது. பேரிறிவாளனின் விடுதலை தொடர்பாக ஆளுநரே முடிவெடுப்பார் என மத்திய அரசு நேற்று உச்சமேலும் படிக்க...
இரு தரப்பு உறவை உயரத்திற்கு கொண்டு செல்வோம் : ஜோ பைடனுக்கு நரேந்திர மோடி வாழ்த்து!
அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில், “ இந்தியா – அமெரிக்கா உறவை பலப்படுத்துவதற்கு அவருடன் இணைந்து செயல்பட எதிர்நோக்கியுள்ளேன். உலகின் பொதுவானமேலும் படிக்க...
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது – டி.டி.வி தினகரன்!
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சசிகலாவை பார்வையிட்டு நலம் விசாரிக்கச் சென்ற டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் மேற்படி குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்துமேலும் படிக்க...
மத்திய சிறையில் சசிகலாவிற்கு திடீர் உடல் நலக்குறை!
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் சசிகலாவிற்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எதிர்வரும் 7ஆம் தேதி சசிகலா விடுதலையாக இருப்பதாக கூறப்படும் நிலையில், அவருக்கு மூச்சுத்திணறல் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பெங்களூர்மேலும் படிக்க...
ஆண்களை விட பெண்கள் அதிகம்- தமிழ்நாட்டில் 6.26 கோடி வாக்காளர்கள்
தமிழகத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ள வாக்காளர்கள் பட்டியலில் ஆண்களை விட பெண்களே அதிகமாக உள்ளனர். வாக்காளர் பட்டியலில் புதிய பெயர்களை சேர்க்க மற்றும் ஏற்கனவே உள்ள பெயர்களை நீக்க ஒவ்வொரு ஆண்டும் இறுதியில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி நடைபெறும். அதன்படிமேலும் படிக்க...
ஜெயலலிதாவின் நினைவிடம் 27 இல் திறப்பு
சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை எதிர்வரும் 27 ஆம் திகதி திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வினை முதலமைச்சர் தலைமையேற்று திறந்து வைக்க இருப்பதாகவும், துணைமேலும் படிக்க...
அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மோடி அழைப்பு!
அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தின் வரவு செலவுக் கூட்டத்தொடா் வரும் 29-ஆம் திகதி ஆரம்பமாகிறது. பெப்ரவரி முதலாம் திகதி 2021-22 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு தாக்கல் செய்யப்படவுள்ளது. கொரோனா நோய்தொற்று பரவலைக் கருத்தில்மேலும் படிக்க...
பிரதமருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையில் சந்திப்பு!
டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியை இன்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்து பேசவுள்ளார். தமிழகத்திற்குத் தேவையான திட்டங்கள் குறித்து பேசுவதுடன், திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்க பிரதமருக்கு அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு நாள் பயணமாக டெல்லிமேலும் படிக்க...
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லொறி ஏறியதில் 13 பேர் உயிரிழப்பு
குஜராத் மாநிலம் சூரத்தில் சாலையோரம் தூங்கிக் கெண்டிருந்தவர்கள் மீது சரக்கு லொறி ஏறியதில் 13 பேர் உயிரிழந்ததுடன் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 6பேரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும்மேலும் படிக்க...
தமிழகத்தில் அரசியல் கட்சியினர் பிரசாரம் மேற்கொள்ள தடை விதிக்கக் கோரிய மனு தள்ளுபடி
கொரோனா அச்சுறுத்தலால் அரசியல் கட்சியினர் பிரசாரம் மேற்கொள்ள தடை விதிக்கக் கோரிய மனுவை, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கொரோனாவின் இரண்டாம் அலை மற்றும் உருமாறிய கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கில், அரசியல் கட்சியினர் பிரசாரம், பொதுக்கூட்டங்கள் மற்றும்மேலும் படிக்க...
உத்தரப் பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர் உயிரிழப்பு?
உத்தரப்பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி ஏற்றிக்கொண்ட மருத்துவமனை ஊழியர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில், மரணத்திற்கும் தடுப்பூசிக்கும் சம்மந்தமில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர். மொராதாபாத் மாவட்ட மருத்துவமனையில், 46 வயது ஊழியர் மகிபால் சிங்கிற்கு கடந்த 16ஆம் திகதி கோவிஷீல்ட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
ரஜினி மக்கள் மன்றத்தினர் எந்தக் கட்சியிலும் இணையலாம் – அறிவிப்பு
ரஜினி மக்கள் மன்றத்தினர் அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியிலும் இணைந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம். சுதாகர் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் “ரஜினி மக்கள் மன்றத்தில்மேலும் படிக்க...
பிரதமருடன் 19-ந்தேதி எடப்பாடி பழனிசாமி சந்திப்பு: நாளை டெல்லி பயணம்
மெட்ரோ ரெயில் திட்டம், காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் உள்ளிட்ட 5 திட்டங்களை தொடங்கி வைக்கும்படி பிரதமர் மோடியை சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுக்கிறார். தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திரமோடியை சந்திப்பதற்காக நாளை டெல்லி புறப்பட்டுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- …
- 176
- மேலும் படிக்க
