Main Menu

குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லொறி ஏறியதில் 13 பேர் உயிரிழப்பு

குஜராத் மாநிலம் சூரத்தில் சாலையோரம் தூங்கிக் கெண்டிருந்தவர்கள் மீது சரக்கு லொறி ஏறியதில் 13 பேர்  உயிரிழந்ததுடன் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 6பேரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள்  அனைவரும் ராஜஸ்தானில் இருந்து வந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

கரும்புகளை ஏற்றி வந்த டிராக்டருக்கு வழி விடும்போது லொறி, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து விலகி அருகில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏறியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் லொறியின் சாரதியை கைது செய்து, பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பகிரவும்...