இலங்கை
விரைவில் தேர்தலை நடத்த தயார் – மஹிந்த தேசப்பிரிய
சுகாதாரத்துறை சார்ந்த மேலதிகாரிகளின் வழிகாட்டல்களுக்கு அமைய, விரைவில் பொதுத் தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலைத் தொடர்ந்து பின்போடும் நோக்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்குக் கிடையாது என்றும் எனினும் சுகாதார நிலைமைகள் சீரடைந்து, சட்ட ரீதியான முட்டுக்கட்டைகள் இல்லாதிருப்பின் தேர்தலைமேலும் படிக்க...
ஜனாதிபதியும் பிரதமரும் நினைத்தால் தமிழருக்கு நல்ல தீர்வை பெற்றுக் கொடுக்க முடியும் – சி.வி.கே.

ஜனாதிபதியும் பிரதமரும் நினைத்தால், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கானத் தீர்வை இலகுவாக பெற்றுக் கொடுக்க முடியும் என வடமாகாணசபை அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். யாழில். இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், தன்னாட்சி சுயாட்சி கொண்ட ஒருமேலும் படிக்க...
20 ஆம், 21 ஆம் நூற்றாண்டில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேசத்தின் ஊடாகத் தீர்வு வேண்டும் – சிவாஜிலிங்கம்
20 ஆம் நூற்றாண்டிலும் 21 ஆம் நூற்றாண்டிலும் தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கையில், இழைக்கப்பட்ட அனைத்து அநீதிகளுக்கும் சர்வதேசத்தின் ஊடாகத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ். நூலகத்தில் இன்று (திங்கட்கிழமை)மேலும் படிக்க...
நாட்டில் இதுவரை எந்த சமூக தொற்றும் இல்லை – சுகாதார அதிகாரிகள்
கொரோனா வைரஸ் தாக்கத்தின் இரண்டாவது அலை குறித்து சுகாதார தொழிற்சங்கங்கள் கவலை எழுப்பியிருந்தபோதிலும், எந்தவொரு சமூக பரவலும் இதுவரை ஏற்படவில்லை என சுகாதார அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். கடந்த வாரம் விடுமுறையில் இருந்த ஒரு இராணுவ அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுமேலும் படிக்க...
தீர்வையே தமிழர்கள் கேட்கின்றனர் – சி.வி.விக்னேஸ்வரன்
தீர்வையே தமிழர்கள் விரும்புகின்றார்கள் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் நேற்று அனுப்பிவைத்துள்ள கேள்விக்கான பாதியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். தாம் ஒரு தேசம் என்ற முறையில் தம்மைத்தாமே ஆளும் உரிமைமேலும் படிக்க...
அழிக்கப்பட்ட அறிவுக் கோயில் – யாழ். பொது நூலக எரிப்பு நாள் இன்று
ஒரு சமூகத்தினுடைய காத்திரமான மாற்றத்துக்கு ஒரே ஒரு நல்ல நூல் உதவி செய்ய முடியும். ஈழத்தமிழர்களின் கடந்த கால வரலாற்றை எடுத்துப்பார்த்தால் சமூக மேம்பாட்டில் எந்தளவுக்கு உரிமைக்கான முன்னெடுப்புகள் பங்காற்றியதோ அதே அளவுக்கு கல்விசார் சமூகத்தின் முன்னெடுப்புகள், தீர்மானங்கள் பங்களித்துள்ளன. ஈழத்தமிழர்கள்மேலும் படிக்க...
கொழும்பில் தற்காலிகமாக தங்கியுள்ளவர்கள் பொலிஸில் தம்மை பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியம்
கொழும்பு மற்றும் அதை அண்டிய பகுதிகளில் தற்காலிகமாக தங்கியுள்ளவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் தம்மை பதிவு செய்துக்கொள்ள வேண்டியது அவசியம் என மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசப்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். தொம்பே பகுதியில் சட்டவிரோமானமேலும் படிக்க...
தந்தையின் கனவுகளை நிச்சயம் நிறைவேற்றுவேன் – ஜீவன் தொண்டமான்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அழியாது. தந்தையின் கனவுகளை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்று அமரர். ஆறுமுகன் தொண்டமானின் மகன் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். நோர்வூட் மைதானத்தில் இன்று நடைபெற்ற இறுதிக்கிரியைகளில் பங்கேற்று நன்றியுரை ஆற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில்மேலும் படிக்க...
சட்டம் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும் – இரா.சாணக்கியன்
இலங்கையில் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பவர்களுக்கு ஒரு சட்டம் ஏனையவர்களுக்கு ஒரு சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே அவர்மேலும் படிக்க...
மட்டக்களப்பில் ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் நினைவு தினம் அனுஷ்டிப்பு
மட்டக்களப்பில் கடந்த 2004ஆம் ஆண்டு சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 16ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பில் கல்லடி வொய்ஸ் ஒஃப் மீடியா ஊடக கற்கைகள் நிறுவகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன. கிழக்கு மாகாணமேலும் படிக்க...
நோர்வூட் விளையாட்டு மைதானத்தில் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகள்
மறைந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் நோர்வூட் விளையாட்டு மைதானத்தில் தற்போது நடை பெற்றுவருகின்றன. அகில இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியம் இன்று அமைச்சர் தொண்டமானுக்கு இறுதிமேலும் படிக்க...
திருநெல்வேலி பொதுச்சந்தை வியாபாரிகளுக்கான இட ஒதுக்கீடு வழங்கும் பணி முன்னெடுப்பு
திருநெல்வேலி பொதுச்சந்தை வியாபாரிகளுக்கான இட ஒதுக்கீடு வழங்கும் நடவடிக்கை நல்லூர் பிரதேச சபையினரால் முன்னெடுக்கப்பட்டது. நாட்டில் கோரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்குச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர் கடந்த மார்ச் மாதம் 24ஆம் திகதிக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள பொதுச் சந்தைகள் அனைத்தும்மேலும் படிக்க...
விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனை மத்திய நிலையத்தை ஸ்தாபிக்க முடிவு
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனை மத்திய நிலையமொன்றை ஸ்தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி மீளத் திறக்கப்படவுள்ளது. இதன்போது, பி.சி.ஆர் பரிசோதனை மத்திய நிலையத்தை திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக விமான நிலையங்கள்மேலும் படிக்க...
காலஞ்சென்ற ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகள் இன்று
காலஞ்சென்ற அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் மைதானத்தில் இடம்பெறவுள்ளன. இந்நிலையில், குறிப்பிட்ட அளவான மக்கள் ஒன்றுகூடுவதற்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தமது 55ஆவதுமேலும் படிக்க...
மீண்டும் இராணுவ ஆட்சியை ஏற்படுத்துவதற்கு அரசு முயற்சி- மணிவண்ணன்
தமிழ் மக்களின் ஜனநாயக ரீதியான உரிமைக் குரல்களை நசுக்கி, மீண்டும் ஒரு இராணுவ ஆட்சியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் குற்றம் சுமத்தியுள்ளார். நாகர் கோயில் குண்டுவெடிப்பு சம்பவம், அமைச்சுக்களின்மேலும் படிக்க...
ஆறுமுகனின் பூதவுடல் கொட்டகலையில்! – மைத்திரி நேரில் அஞ்சலி!
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர். ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இன்று (30) முற்பகல் கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. கொழும்பில் இருந்து ஹெலிகொப்டரில் எடுத்து வரபட்ட அன்னாரின் பூதலுடல் நேற்று (29 )மேலும் படிக்க...
புதிய இந்திய உயர் ஸ்தானிகர் ஜனாதிபதியுடன் சந்திப்பு
இலங்கைக்கான புதிய இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று (29) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார். இலங்கையின் இராஜதந்திர உறவுகளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கடந்த மே 14 ஆம் திகதி காணொளி தொழிநுட்பத்தின்மேலும் படிக்க...
மாவைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

தமிழரசு கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவுக்கு எதிராக யாழ்ப்பாண பொலிஸாரினால் தொடரப்பட்ட வழக்கு, தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தினை, மக்களை கூட்டி யாழ்ப்பாணம் மார்டீன் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமையகத்தில் தலைவர்மேலும் படிக்க...
தொண்டமானின் இழப்பு அனைத்து சிறுபான்மை மக்களின் இழப்பாகும் – சந்திரகுமார்
அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் இழப்பு மலையக மக்களுக்கான இழப்பு மட்டுமல்ல. அனைத்து சிறுபான்மை மக்களின் இழப்பாகுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார். ஆறுமுகம் தொண்டமானின் இறப்பு தொடர்பாக இரங்கல் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மு.சந்திரகுமார் மேலும் கூறியுள்ளதாவது, “தொழிற்சங்கவாதியாக,மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 332
- 333
- 334
- 335
- 336
- 337
- 338
- …
- 435
- மேலும் படிக்க
