இலங்கை
மட்டக்களப்பில் வெள்ளத்தினால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் 5 பிரதேச செயலகப் பிரிவுகளில் ஆயிரத்து 452 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 639 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 89 குடும்பங்களைச் சோந்த 267 பேர் 3 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன்,மேலும் படிக்க...
யாழ். மாநகர சபையில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அமைத்தல் உள்ளிட்ட மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றம்
யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் புதிய முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அமைத்தல் உள்ளிட்ட மூன்று தீர்மானங்கள் இன்றைய சபை அமர்பில் நிறைவேற்றப்பட்டுள்ளன. யாழ். மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான முதலாவது அமர்வு இன்று (புதன்கிழமை) மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில்மேலும் படிக்க...
தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதி முன்வைத்துள்ள கோரிக்கை
மேன்முறையீட்டு வழக்குகள் இரண்டிலும் துரித விசாரணை சாத்தியமில்லையாயின், பிணை அனுமதி பெற ஆவண செய்து தருமாறு கோரி, 6 நாட்களாக அரசியல் கைதியொருவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். புதிய மகசின் சிறைச்சாலையிலுள்ள அரசியல் கைதியான இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர்மேலும் படிக்க...
அடையாளம் அற்ற மனிதர்களாக அச்சம் மிகுந்த சூழ்நிலையில் தமிழர்கள்- ஸ்ரீதரன்
அடையாளம் அற்ற மனிதர்களாக தமிழர்களாகிய நாம் மாறப்போகிறோமா என்ற அச்சம் மிகுந்த சூழ்நிலையில் தமிழர்கள் வாழ்வதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் “மிகமுக்கியமாக இன்றைய காலகட்டம் என்பது எல்லோருக்குமே ஒருமேலும் படிக்க...
ஜெனீவா கூட்டத் தொடருக்கான தமிழர் தரப்பின் நடவடிக்கைகளை ஐ.நா. பிரதிநிதியிடம் விளக்கினார் சி.வி.
ஜெனிவா கூட்டத்தொடரில் தமிழர் தரப்பு விடுக்கவுள்ள கோரிக்கைகள் குறித்து, இலங்கையின் ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கருக்கு நாடாளுமன்ற உறுப்பினர், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் விளக்கமளித்துள்ளார். ஹனா சிங்கரின் அழைப்பின் பேரில் சி.வி.விக்னேஸ்வரன், அவரது அலுவலகத்திற்கு இன்று (திங்கட்கிழமை) சென்று கலந்துரையாடலைமேலும் படிக்க...
மாணவ சமூதாயத்தின் பலம் இன்னொருமுறை நிரூபிக்கப்படுள்ளது – சாணக்கியன்
மாணவ சமூதாயத்தின் பலம் இன்னொருமுறை நிரூபிக்கப்படுள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வடக்கு கிழக்கில் இன்று (திங்கட்கிழமை) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.மேலும் படிக்க...
பதவி மோகத்திற்காகவே துணை வேந்தர் நினைவுத்தூபியை இடித்தார்- யோகேஸ்வரன் குற்றஞ்சாட்டு
பதவி மோகத்திற்காகவே யாழ்.பல்கலைத் துணை வேந்தர் நினைவுத்தூபியை இடித்தார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் குற்றஞ் சாட்டியுள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் யோகேஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது,மேலும் படிக்க...
முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை அமைக்க நல்லூார் பிரதேச சபை அனுமதி!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் மீளவும் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை உத்தியோகபூர்வமாக அமைக்க, நல்லூார் பிரதேச சபை இன்று (திங்கட்கிழமை) அனுமதி வழங்கியுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்தழிக்கப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன், இன்று காலை வரை உணவு தவிர்ப்புமேலும் படிக்க...
ஈஸ்டர் தாக்குதல்: இலங்கையில் ஒருவருக்கு எதிராகக்கூட எவ்வித குற்றச்சாட்டும் தாக்கல் செய்யப்படவில்லை
இலங்கையில் ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பான எவரும் இதுவரை நீதிமன்றின் மூலம் தண்டிக்கப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது. இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன, அமெரிக்காவில் மூன்று பேருக்கு எதிராகமேலும் படிக்க...
ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை: தீர்ப்பு சாதகமாகவே அமையும்- பிள்ளையான் நம்பிக்கை
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பிலான வழக்கினை தொடர்ந்து நடாத்தமுடியாது என சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மேல் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் எதிர்வரும் புதன்கிழமை குறித்த வழக்கு தொடர்பான தீர்ப்பு வழங்கப்படும் எனமேலும் படிக்க...
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப் பட்டமைக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவிக்க வேண்டும்- அனந்தி
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டமைக்கு எதிராக உலக நாடுகள் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என முன்னாள் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகமேலும் படிக்க...
வடக்கு- கிழக்கிலுள்ள மக்களை ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குமாறு சாணக்கியன் அழைப்பு
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு வடக்கு- கிழக்கிலுள்ள அனைத்து மக்களையும் ஆதரவு வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரியுள்ளார். நேற்று (சனிக்கிழமை) மாலை, விசேட காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு மேலும் படிக்க...
4ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப் பட்டவர்களின் நினைவுதினம்
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 4ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 47ஆவது நினைவு அஞ்சலி நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. யாழ். முற்றவெளில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை நினைவாலயத்தில் இன்று காலை 9.30 மணிக்கு இந்த நிகழ்வு உணர்வுபூர்வமாகமேலும் படிக்க...
முள்ளிவாய்க்கால் தூபியைத் தகர்த்தமை படுபாதகச் செயல்- ரிஷாட் கண்டனம்!
யாழ். பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி, இரவோடிரவாக தகர்க்கப்பட்டமை அநகாரிக செயல் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். நினைவிட அழிப்பு குறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
எமது உரிமைகள், உணர்வுகளை அழிக்க முடியாது- நினைவுத்தூபி அழிப்புக்கு சாணக்கியன் கடும் கண்டனம்!
எமது உரிமைகள், உணர்வுகளை அழிக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியைமேலும் படிக்க...
ஜெனிவா அமர்வு தொடர்பாக தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்த வரைபு விரைவில் வெளியிடப்படும்- சுமந்திரன்
ஜெனிவா அமர்வு தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மூன்று கட்சிகளின் தலைவர்களின் கலந்துரையாடலில் வரையப்பட்ட வரைபு சிறிய மாற்றம் செய்யப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என கிளிநொச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஜெனிவா விடயங்களைக் கையாள்வதற்கு ஒருமேலும் படிக்க...
தமிழ் இன எழுச்சியின் அடையாளத்தை அழிக்கும் செயலை முறியடிக்க வேண்டும்- மயூரன்
தமிழ் இன எழுச்சியின் அடையாளமாக திகழும் நினைவு முற்றத்தை அழிக்க எத்தனிக்கும் எதிரிகளின் செயல்களை முறியடிப்பது, தமிழர்களின் கடமையாகுமென முன்னாள் வட.மாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக யாழ்ப்பாணம்மேலும் படிக்க...
சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 12ஆம் ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு
படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 12வது நினைவு தின நிகழ்வு, மட்டு.ஊடக அமையத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. நேற்று (வெள்ளிக்கிழமை) மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் தீபச்சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஒரு நிமிடம்மேலும் படிக்க...
தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டது போராட்டம்- உண்ணா விரதத்தில் சில மாணவர்கள்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக யாழ்.பல்கலைக்கழகம் முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சற்று முன்னர்மேலும் படிக்க...
முள்ளிவாய்கால் நினைவுத் தூபி இடிக்கப் பட்டமைக்கும் தமக்கும் தொடர்பில்லை
முள்ளிவாய்கால் நினைவுத் தூபி இடிக்கப்பட்டமைக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நினைவுத் தூபி இடிக்கப்பட்டமை, பல்கலைக்கழக நிர்வாகத்தின் தீர்மானம் என தெரிவித்துள்ள அவர், அந்த விடயத்திற்கும் இராணுவத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்றும்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 295
- 296
- 297
- 298
- 299
- 300
- 301
- …
- 443
- மேலும் படிக்க
