Main Menu

ஈஸ்டர் தாக்குதல்: இலங்கையில் ஒருவருக்கு எதிராகக்கூட எவ்வித குற்றச்சாட்டும் தாக்கல் செய்யப்படவில்லை

இலங்கையில் ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பான எவரும் இதுவரை நீதிமன்றின் மூலம் தண்டிக்கப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது.

இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன, அமெரிக்காவில் மூன்று பேருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.

குறித்த தாக்குதல் இடம்பெற்றபோது நல்லாட்சி அரசாங்கத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன என குறிப்பிட்ட அவர், தற்போது வேறுவேறு காட்சிகளாக இருந்தாலும் இவற்றை மறுப்பதாக கூறினார்.

மேலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கற்கோ அல்லது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ருவான் விஜேவர்த்தனவிற்கோ எவ்வித தொடர்பும் கிடையாது என்றும் எரான் விக்ரமரத்ன குறிப்பிட்டார்.

எனவே இந்த விவகாரத்தில் பொறுப்பு கூறவேண்டிய இந்த அரசாங்கம் கைது நடவடிக்கைகளை மட்டும் செய்யாமல் அவர்களை நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தி தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எரான் விக்ரமரத்ன கேட்டுக்கொண்டார்.

பகிரவும்...