Main Menu

Air France விமான சேவைகள் படிப்படியாக அதிகரிக்கப்படும்

Air France விமான சேவைகள் படிப்படியாக அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனா வைரஸ் காரணமாக தடைப்பட்டிருந்த விமான போக்குவரத்து சேவைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. Air France சேவைகள் தற்போது 2% இல் இருந்து 5% வரை இயங்கி வருகின்றது. இந்த சேவைகள் படிப்படியாக அதிகரிக்கப்படும் என Air France நிறுவனத்தினர் அறிவித்துள்ளனர். ஜூன் மாத இறுதியில் 15% வீதமளவான சேவைகள் இயங்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.  அதேவேளை, பயணம் செய்வதற்குரிய கட்டுப்பாடுகளும் படிப்படியாக தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Air France நிறுவனத்துக்கு சொந்தமான 224 விமானங்களில்  75 விமானங்கள் ஜூன் மாத இறுதியில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...