Main Menu

திருட்டு , கொள்ளைச் சம்பவங்களை ஒடுக்க மே மாதம் முதல் விசேட செயற்திட்டம்! -பொலிஸ் மா அதிபர்

நாடளாவிய ரீதியில் இடம்பெறும்  திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களை ஒடுக்குவதற்காக மே மாதம் 1ஆம் திகதி முதல் விசேட செயற்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நேற்று (16) இலங்கையில் உள்ள 600 பொலிஸ் நிலையங்களின் அதிகாரிகளுடன்  இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பொலிஸ் மா அதிபர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

இந்த விசேட செயற்திட்டத்திற்காக அனைத்து பொலிஸ் பிரிவுகளிலிருந்தும்  நூற்றுக்கு 60 வீதமான பொலிஸ் அதிகாரிகள் வீதியோர கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். 

குற்றச் செயல்கள் இல்லாத அமைதியான  சமூகத்தையும் சூழலையும் உருவாக்குவதே பொலிஸ் அதிகாரிகளின் இலக்காக உள்ள நிலையில் தங்களால் அந்த இலக்கை அடைய முடியவில்லை.

எனினும் இந்த புத்தாண்டையடுத்து குற்றச் செயல்கள் இல்லாத அமைதியான சமூகத்தையும் சூழலையும் உருவாக்குவதே எமது இலக்கு. 

மே மாதம் 1 ஆம் திகதி முதல் அடுத்த மூன்று மாதத்திற்குள் இந்த விசேட செயற்திட்டத்தின் மூலம் நாட்டில் இடம்பெறும் குற்றச் செயல்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த 2023 ஆம் ஆண்டில் நாட்டில் 12,135 வீடு உடைப்புகள் , 3,138 கொள்ளைகள் ,1748 வாகன திருட்டுகள் , 84 நகை திருட்டுகள் உட்பட 14,929 குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

பகிரவும்...