Main Menu

சதொசவில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

பண்டிகை காலத்தை முன்னிட்டு பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் இந்த விலைக் குறைப்பு நேற்று திங்கட்கிழமை (08) நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

விலை விபரங்கள் வருமாறு:

ஒரு  கிலோகிராம் செத்தல் மிளாகாயின் விலை 300 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் விலை 850 ரூபாவாகும்.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் ஒரு கிலோவின் விலை 120 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 375 ரூபாவாகும்.

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராமின் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 445 ரூபாவாகும்.

வெள்ளைப்பூடு ஒரு கிலோகிராமின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 680 ரூபாவாகும்.

உருளைக்கிழங்கு ஒருகிலோகிராமின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 165 ரூபாவாகும்.

இதேவேளை, ஒரு கிலோ சிவப்பு  பருப்பின் விலையை 7 ரூபாவாலும், ஒரு கிலோ  வெள்ளை நாட்டரிசியின் விலையை 3 ரூபாவாலும் குறைக்க சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.

பகிரவும்...