Main Menu

தாய்லாந்தில் வாடகைக் கார் விபத்தில் 8 துறவிகள் உயிரிழந்தனர்

தாய்லாந்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள முக்தஹான் மாகாணத்தில், புனிதப் பயணம் மேற்கொண்டிருந்த துறவிகள் குழு மீது 11 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற வாடகைக் கார் மோதியதில் எட்டு துறவிகள் உயிரிழந்ததாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் மேலும் 13 துறவிகள் படுகாயம் அடைந்தனர்.

முவாங் மாவட்டத்தின் பான் நா சி நுவான் என்ற இடத்தில் இன்று (2) மதியம் சுமார் 12 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காவல்துறை மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர், ஆனால் பல துறவிகள் சாலையில் கிடந்ததாகக் கூறப்படுகிறது.

ஐந்து துறவிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்,

இதேவேளை, படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூன்று துறவிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

காயமடைந்த ஏனைய 13 துறவிகளும் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டு, அவர்களுக்குத் தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணையின்படி, விபத்தை ஏற்படுத்திய வாடகைக் காரை 11 வயது சிறுவன் ஓட்டிச் சென்றது தெரியவந்துள்ளது.

குறித்த சிறுவன் தனது பெற்றோர் அனுமதியின்றி வாகனத்தை ஓட்டி, இந்த கோர விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து தாய்லாந்து காவல்துறை மேலதிக விசாரணைகளை நடத்தி வருகிறது.