Day: July 2, 2026
பயங்கரவாதத் தடைச் சட்டக் காவலில் இருந்து விடுக்கப்பட்ட இனியபாரதி விளக்கமறியலில்

திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் உள்ளிட்ட 6 மனிதப் படுகொலைகள் தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்டப் பொறுப்பாளரும்,மேலும் படிக்க...
வெனிசுவேலாவில் நிலநடுக்கம்: 140 தொன் இடிபாடுகளுக்குள் 8 நாட்கள் சிக்கியிருந்த பொதுமகன் உயிருடன் மீட்பு

வெனிசுவேலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, கட்டிட இடிபாடுகளுக்குள் 8 நாட்களாகச் சிக்கியிருந்த ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். ஹெர்னான் கில் என்ற அவரை 140 தொன் எடையுள்ள இடிபாடுகளுக்கு அடியிலிருந்து மீட்புப் பணியாளர்கள் வெற்றிகரமாக மீட்டுள்ளனர். அவரை முதன்முதலில் கண்டுபிடித்ததில் இருந்து,மேலும் படிக்க...
மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா – இலட்சக் கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா இன்று (2) சிறப்பாக இடம்பெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் கூட்டுத்திருப்பலியாக திருவிழாத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. திருவிழா திருப்பலியைத் தொடர்ந்து, மடு அன்னையின் மகிமை விளங்கும் திருச்சொரூப பவனி இடம்பெற்றதுடன்மேலும் படிக்க...
அர்ச்சுனாவின் பதவி இரத்துக்கான மனு விசாரணைக்கு

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை, விசாரணைக்காக எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி அழைப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘அபினவ நிவஹல் பெரமுன’வின் தலைவர் ஓஷல ஹேரத்தினால்மேலும் படிக்க...
தமிழக அரசியல் மோதல்; விஜய் தலைமையிலான அரசை கவிழ்க்க சதி முயற்சி?

தமிழ் நாட்டில் தமிழக வெற்றிக் கழக அரசாங்கத்தைக் கவிழ்க்கத் திட்டமிடப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம், டிவிகே மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவுக்கும் இடையே பரஸ்பர குற்றச்சாட்டுகள் பரிமாறப்படும் ஒரு தீவிர அரசியல் மோதலாக உருவெடுத்துள்ளது. தமிழக சட்டப்பேரவைமேலும் படிக்க...
தாய்லாந்தில் வாடகைக் கார் விபத்தில் 8 துறவிகள் உயிரிழந்தனர்

தாய்லாந்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள முக்தஹான் மாகாணத்தில், புனிதப் பயணம் மேற்கொண்டிருந்த துறவிகள் குழு மீது 11 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற வாடகைக் கார் மோதியதில் எட்டு துறவிகள் உயிரிழந்ததாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் மேலும் 13மேலும் படிக்க...
மொழி உரிமையும் மதிக்கப்படும் சமத்துவ இலங்கை நோக்கி உறுதி பூண்டுள்ளோம் – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

ஒவ்வொரு பிரஜையினதும் மொழி உரிமைக்கும் மதிப்பளிக்கும், சமத்துவத்தைப் பாதுகாக்கும், பன்முகத்தன்மையை ஒரு சக்தியாக மாற்றியமைக்கும் இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அரச கரும மொழிகள் வாரத்திற்குச் சமாந்தரமாக நடைபெற்ற பாடசாலைகளுக்கு இடையிலானமேலும் படிக்க...
2028 முதல் பிளேஸ்டேஷன் கேம்களில் ‘டிஸ்க்’ (CD/DVD) பயன்பாடு படிப்படியாக நிறுத்தம்? சோனி நிறுவனம் அதிரடித் திட்டம்

புதிய பிளேஸ்டேஷன் கேமிங் கன்சோல்களில் CD/DVD போன்ற பிசிகல் டிஸ்க் மூலம் இயங்கும் கேம்களுக்கான ஆதரவை, வரும் 2028-ஆம் ஆண்டு முதல் படிப்படியாக நிறுத்த சோனி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பி.பி.சி. (BBC) ஊடகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, எதிர்காலத்தில் சந்தைக்குமேலும் படிக்க...
“போதைப்பொருள் இல்லா இலங்கை நோக்கி: ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்” – ஜனாதிபதி

போதைப் பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதில் தொடர்புடைய அனைத்து அரச நிறுவனங்களும் தேசிய திட்டத்திற்கு ஏற்ப செயற்பட வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார். போதைப்பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டுச் சபை மூன்று பீடங்கள்மேலும் படிக்க...
தவெக தோழமை கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்காத நிலையில் முதல்வருடன் கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு

தவெக நடத்தும் தோழமை கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்காத நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் முதல்வர் விஜய்யை சந்தித்துப் பேசினர். தவெக தோழமை கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம், முதல்வர் விஜய் தலைமையில் கோவளத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு தோழமை கட்சிகளின் தலைவர்களுக்குமேலும் படிக்க...
“என் மனைவிக்கு நடந்த துயரம் வேறு எந்த குடும்பத்திற்கும் நேரக்கூடாது” இளம் தாயின் கணவர் நீதிக்காக கோரிக்கை

எனக்கு நேர்ந்த இந்தத் துயரம் இனி வேறு எந்தவொரு குடும்பத்திற்கும் நடந்துவிடக் கூடாது. எனது மனைவியின் இழப்பிற்குச் சம்பந்தப்பட்ட அனைவரும் பதில் சொல்லியே ஆக வேண்டும்’ தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கிடைக்கவும் ஒரிஜினல் மருத்துவ ஆவணங்களை மீட்டுத் தரவும் ஜனாதிபதிமேலும் படிக்க...
உலக சாதனை படைத்த மைக்கல் ஜெக்சனின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம்

மைக்கல் ஜெக்சனின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான ‘மைக்கல்’, உலகளவில் 977 மில்லியன் டொலர்களை வசூலித்து, வரலாற்றிலேயே மிக அதிக வசூல் செய்த Biopic திரைப்படமாக சாதனை படைத்துள்ளது. இதன் மூலம், பிரபல இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் ‘ஓப்பன்ஹைமர்’ திரைப்படத்தின் சாதனையை இதுமேலும் படிக்க...
முதல்வர் விஜய்யை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தவெகவில் ஐக்கியம்

திருச்சி கிழக்கு தொகுதியில் முதல்வர் விஜய்யை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் க.ராஜசேகரன் இன்று தவெகவில் இணையும் நிலையில், ‘மனவலியுடன் விலகுவதாக’ எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் புதுக்கோட்டை சி.விஜயபாஸ்கர், கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோருடன் திருச்சியைச் சேர்ந்தமேலும் படிக்க...
1,454 அடி உயரத்தில் திருமண நிச்சயதார்த்தம்

சாகசச் செயல்களுக்குப் பெயர் பெற்ற ரஷ்யத் தம்பதியினர் புதன்கிழமையன்று (01) நியூயோர்க்கின் ‘எம்பயர் ஸ்டேட்’ கட்டிடத்தின் உச்சிப் பகுதிக்கு ஏறி அமைதி முழக்கம் அடங்கிய பதாகை ஒன்றை விரித்தனர். இந்த செயலின் காரணமாக இறுதியில் அவர்கள் கைதும் செய்யப்பட்டனர். இருவர்களது திருமணத்திற்கானமேலும் படிக்க...
பீஜிங் வானூர்தி விபத்து: விபரங்களை மறைக்கிறதா சீனா?

சீனத் தலைநகர் பீஜிங்கில் உள்ள 109 மாடிகளைக் கொண்ட ‘CITIC’ கோபுரத்தில் சிறிய ரக வானூர்தியொன்று மோதி நான்கு நாட்கள் கடந்துள்ள போதிலும், விபத்துக்கான காரணம் குறித்த விபரங்களை சீன அரசு மூடிமறைத்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த வெள்ளிக்கிழமைமேலும் படிக்க...
போர்க்களத்தில் 14 பேரின் உயிரைக் காத்த இலங்கை வான்படையின் துணிச்சலுக்கு பாராட்டு

மத்திய ஆபிரிக்கக் குடியரசில் ஐநா அமைதி காக்கும் படையில் கடமையாற்றும் இலங்கை வான்படைப் பிரிவினர், கொடூரமான துப்பாக்கிச் சமர் மற்றும் மோசமான வானிலைக்கு மத்தியிலும் 14 பேரின் உயிர்களைக் காப்பாற்றி சாதனை படைத்துள்ளனர். ‘அம் டெஃபொக்’ பகுதியில் ஆயுதக்குழுவினர் நடத்திய தாக்குதலில்மேலும் படிக்க...
ஜனாதிபதியின் நோயாளர் காவு வண்டி முல்லைத்தீவு பொது மருத்துவமனைக்கு

ஜனாதிபதியின் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டிருந்த சொகுசு நோயாளர் காவு (Ambulance) வண்டியொன்று, முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையின் அவசரச் சிகிச்சை மற்றும் நோயாளி போக்குவரத்துச் சேவைகளை வலுப்படுத்துவதற்காகக் கையளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கையளிப்பு நிகழ்வு அண்மையில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சில் நடைபெற்றது.மேலும் படிக்க...
தையிட்டி போராட்டத்திற்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் – வன்னியசிங்கம் பிரபாகரன் கோரிக்கை

தையிட்டி விகாரை போராட்டம் நடைபெற்ற போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமர்ந்திருந்த கூடாரங்களை உடைத்து எறிந்ததாக காட்டி முகநூலில் காணொளி ஒன்று பரப்பப்பட்டு வருவதை தொடர்ந்து, வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர் நேற்று (01) உதவி பொலிஸ் அத்தியட்சகரை அவரது அலுவலகத்தில்மேலும் படிக்க...
நெடுங்கேணியில் 78 கிலோ கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த 31 வயது நபர் ஒருவர், காரில் 78 கிலோ கேரள கஞ்சாவை கடத்தி சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளதாக நெடுங்கேணி பொலிசார் தெரிவித்தனர். வவுனியா – நெடுங்கேணி பொலிஸ் நிலைய அதிகாரிகள் நேற்றுமுன்தினம் (30)மேலும் படிக்க...
காணி விடுவிப்புக்கு ஆதரவாக பௌத்த மதகுரு உள்ளிட்ட குழு கேப்பாப்புலவில் போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்புலவில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் நேற்று (01) எட்டாவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இந் நிலையில் பௌத்த மதகுருமேலும் படிக்க...
