Main Menu

போர் நிறுத்த அறிவிப்புக்கு பின்னரும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு

வோஷிங்டனில் நடைபெற்ற தொடர் பேச்சுவார்த்தைகளின் போது, போரை நிறுத்துவதற்கு இஸ்ரேல் மற்றும் லெபனான் அதிகாரிகள் ஒப்புக்கொண்ட பின்னரும், வாகனம் ஒன்றை இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்திய ஆளில்லா வானூர்தி தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த போர்நிறுத்த அறிவிப்புக்கு முன்னர், தெற்கு லெபனானின் கன்தாரா பகுதியிலிருந்த இஸ்ரேலியப் படையினர் மீது பல ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக ஹிஸ்புல்லா அமைப்பு அறிவித்திருந்தது.
அத்துடன், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பியூஃபோர்ட் கோட்டைக்கு அருகிலிருந்த இஸ்ரேலிய இராணுவத்தினர் மீதும் ஆளில்லா வானூர்திகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலடியாகவே இஸ்ரேல் இராணுவம் போர் நிறுத்த அறிவிப்புக்குப் பின்னர், தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதேவேளை, காஸா நகரில் உள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றின் மீது இஸ்ரேல் இரவு நேரத்தில் நடத்திய வான்வழித் தாக்குதல்களில், 4 சிறுவர்கள் உட்பட குறைந்தபட்சம் 9 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.