Main Menu

அமைச்சர் ராஜ்மோகனுக்கு சினிமாத்துறையை ஒதுக்கியது தவறு – நடிகர் விஷால்

அமைச்சர் ராஜ்மோகனுக்கு திரைப்படத் துறை பொறுப்பு ஒதுக்கப்பட்டமைக்குத் தென்னிந்திய நடிகர்கள் சங்கப் பொதுச்செயலாளரும் நடிகருமான விஷால் தனது வருத்தத்தையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்துள்ள அவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

“அமைச்சர் ராஜ்மோகனுக்கு திரைப்படத் துறை பொறுப்பு ஒதுக்கப்பட்டது வருத்தமளிக்கிறது.

திரைத்துறை சார்ந்த கோரிக்கைகளை எந்தவொரு அனுபவமும் இல்லாத ராஜ்மோகனிடம் வைப்பது சரியாக இருக்குமா? அல்லது 30 ஆண்டுகள் சினிமாவில் பயணித்த முதலமைச்சர் விஜயிடம் வைப்பது சரியாக இருக்குமா?

அமைச்சர் ராஜ்மோகனைச் சிறுமைப்படுத்தும் நோக்கத்தில் நான் இதைச் சொல்லவில்லை. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமே” என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சரவையில் திரைத்துறைக்கான பொறுப்பு ஒதுக்கீடு குறித்து சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ள இந்த விவாதம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.