கணேமுல்லா சஞ்சீவ கொலை; பெண் சட்டத்தரணிக்கு விளக்கமறியல் நீடிப்பு
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் சந்தேக நபராகப் பெயரிடப்பட்டு, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி தாமர குமாரி அபேயரத்னவை, மே 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அவரது தடுப்புக் காவல் உத்தரவு காலாவதியானதைத் தொடர்ந்து, சந்தேக நபர் குற்றப் புலனாய்வுத் துறையால் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது நீதிவான் மேற்கண்ட உத்தரவினை பிறப்பித்தார்.
