வவுனியா முதல்வர், சாவகச்சேரி உப தவிசாளர் பதவி நீக்கம்
வவுனியா மாநகர சபையின் முதலாவது முதல்வரான சுந்தரலிங்கம் காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிசோர் ஆகியோர் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகத்தினால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
அவர்கள் மீதான விசாரணை ஒன்றின் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றங்கள் கட்டளைச் சட்டம் ஏற்பாடுகளின் படி இந்த பதவி நீக்கம் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
