Main Menu

போலந்திடம் மன்னிப்பு கோரியது ஜேர்மனி!

போலந்து மக்களிடம் ஜேர்மன் அதிபர் ஃபிராங்க்-வால்ட்டர் ஸ்டீன்மீயர் மன்னிப்பு கோரியுள்ளார்.

இரண்டாவது உலகப் போரின்போது ஜேர்மனிய படையினர் போலந்தின் வீலுன் நகரில் குண்டுவீச்சு நடத்த ஆரம்பித்த 80-ஆவது ஆண்டு தினம் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) நினைவு கூறப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே ஜேர்மன் அதிபர் போலந்து மக்களிடம் இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார்.

இதன்போது அங்கு உரையாற்றிய ஜேர்மன் அதிபர், ‘ஜேர்மனிய படையினரால் பாதிக்கப்பட்ட அனைத்து போலந்து மக்களிடமும் நான் தலை வணங்கி மன்னிப்பு கோருகிறேன்.

போலந்தில் மனித குலத்துக்கு எதிராக ஜேர்மனிய படையினர் மிகப் பெரிய குற்றங்களை நிகழ்த்தினர்.

ஐரோப்பாவில் நாஜிக்கள் நடத்திய கொடூரங்கள், ஜேர்மனி வரலாற்றில் அழியாத கறையாக இருக்கும்’ என குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...