Main Menu

இரு சமூ­கத்­தி­ன­ரும் ஒன்­றி­ணைந்த புத்­தாண்­டாக இம்­முறை அமை­யும் – சந்­தி­ரிகா

இரண்டு சமூ­கத்­தி­ன­ரும் இணைந்த புத்­தாண்­டாக இந்த ஆண்­டுப் புத்­தாண்டு அமை­யும் என்று முன்­னாள் அரச தலை­வர் சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்கா தெரி­வித்­தார்.

தேசிய நல்­லி­ணக்க புத்­தாண்டு பெரு­விழா யாழ்ப்­பா­ணம் மாவட்­டச் செய­ல­கம், தேசிய ஒருமை பாட்­டுக்­கும் நல்­லி­ணத்­துக்­கு­மான அலு­வ­ல­கம், அரச கரும மொழி­கள் அமைச்சு ஆகி­ய­வற்­றின் ஏற்­பாட்­டில் யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்­ட­ரங்­கில் நேற்று நடை­பெற்­றது. அதில் கலந்து கொண்டு உரை­யாற்­றும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:-

இது­வரை கால­மும் தமிழ் மற்­றும் சிங்­கள மக்­கள் தங்­கள் புத்­தாண்டு கொண்­டாட்­டத்தை தனித் தனி­யாக கொண்­டா­டி­னார்­கள். ஆனால் இந்த வரு­டம் யாழ்ப்­பா­ணத்­தில் இவ்­வாறு ஒரு நிகழ்­வின் மூலம் இரண்டு இன மக்­க­ளும் இணைந்து புத்­தாண்டு கொண்­டா­ட்டங்­களைச் செய்­கி­றார்­கள்.

அனைத்து மத இனத்­த­வர்­க­ளும் இங்கு வந்­துள்­ள­னர்.ஒரு இனத்­தின் கலா­சா­ரத்தை ஏனைய இன மாண­வர்­கள், மக்­கள் அறிந்து கொள்ள வேண்­டும். இது­வரை சண்டை இட்­டது போதும். இனி­மேல் சமா­தா­ன­மாக வாழ வேண்­டும்.
இங்கு நடை­பெ­றும் நிகழ்வு ஒரு சமா­தா­னத்­துக்­கா­னது. இங்கு வந்­துள்ள ஆசி­ரி­யர்­கள் இந்த சமா­தா­னச் செய்­தியை மாண­வர்­க­ளுக்குச் சொல்ல வேண்­டும். நாம் அனை­வ­ரும் ஒரே இனம்­தான் .இந்த நிகழ்வு சிறப்­பாக நடை­பெ­று­வ­தற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கிய அனை­வ­ருக்­கும் நன்­றி­கள் – என்­றார்.

தமிழ்–சிங்­கள பாரம்­ப­ரிய நட­னங்­கள் மற்­றும் விளை­யாட்டு நிகழ்­வு­கள் இடம் பெற்­றன. தமிழ் – சிங்­கள புத்­தாண்டு கலா­சா­ரம், பழக்க வழக்­கத்தை பிரதி பலிக்­கும் வகை­யில் மைதா­னத்­தில் ஓலை மண் வீடு­கள் அமைக்­கப்­பட்­டி­ருந்­தன. மாட்டு வண்­டில், துலா போன்ற பல்­வேறு பாரம்­ப­ரிய அம்­சங்­களை உள்­ள­டங்­கிய வீடு­க­ளாக அவை அமைக்­கப்­பட்­டி­ருந்­தன. அவற்றை விருந்­தி­னர்­கள் பார்­வை­யிட்­ட­னர்.

நிகழ்­வில் வடக்கு மாகாண ஆளு­நர் சுரேன் ராக­வன், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், ஆசி­ரி­யர் கலா­சாலை மாண­வர்­கள், கலை­ஞர்­கள், அரச அதி­கா­ரி­கள் எனப் பலர் கலந்து கொண்­ட­னர்.

பகிரவும்...