Main Menu

அனுமதி பத்திரம் இல்லாமல் வாகனங்கள் ஓட்டும் சாரதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

சாரதி அனுமதி பத்திரம் இல்லாமல் வாகனங்கள் ஓட்டும் சாரதிகளின் எண்ணிக்கை தற்போது 700,00 ஐ தொட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.  சாரதி அனுமதி பத்திரம் எடுப்பதற்கான கட்டணம் மிக மிக அதிகமாக இருப்பதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரு நகரம் என்று இல்லாமல் நாடு முழுவதும் இந்த சாரதிகளின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. Seine-et-Marne இல் தினமும் ஓட்டுனர் உரிமம் இன்றி பயணிக்கும் சாரதிகள் கைது செய்யப்படுகின்றார்கள். கடந்த பத்து வருடங்களில் இது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.  “நான் வேலை பார்த்து பணம் சேர்த்து சாரதி அனுமதி அத்திரம் எடுப்பது மிக சிரமமாக காரியமாக உள்ளது” என சாரதிகள் குற்றம் சாடியுள்ளனர். ஆனால் காவல்துறையினர் தரப்பில், “அவர்களிடம் வாகனங்கள் உள்ளது. ஆனால் சாரதி அனுமதி பத்திரம் பெற பணம் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என தெரிவித்துள்ளனர். இதுவரை கணக்கிட்டதில் நாட்டில் மொத்தமாக 680,000 சாரதிகள், அனுமதி பத்திரம் இன்று வாகனங்கள் செலுத்துகின்றனர்.  அதேவேளை, சாரதி அனுமதி பத்திரம் இன்றி கைது செய்யப்படும் நபர்களுக்கு €15,000 கள் வரை தண்டப்பணம் அறவிடப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. <<அனுமதி பத்திரம்  இல்லாத சாரதிகள் விபத்துக்குள்ளாகுவதால் மேலும் பல பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கின்றனர்>> எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...