Main Menu

76வது பிறந்த நாள் வாழ்த்து – திரு.கே.எஸ் வேலாயுதம் அவர்கள் (22/04/2021)

தாயகத்தில் காரைநகரை பிறப்பிடமாகக் கொண்டவரும் ஐக்கிய இராச்சியத்தை வதிவிடமாகக் கொண்டவருமான TRT தமிழ் ஒலியின் ஐரோப்பிய செய்தியாளர் கே எஸ் வேலாயுதம் அவர்கள் தனது 76வது பிறந்தநாளை 22ம் திகதி ஏப்ரல் மாதம் வியாழக்கிழமை இன்று லண்டனில் உள்ள தனது இல்லத்தில் மகிழ்வோடு கொண்டாடுகின்றார்.

இன்று 76வது பிறந்தநாளை கொண்டாடும் கே.எஸ்.வேலாயுதம் அவர்களை மகள்மார் நந்தினி (பாரிஸ்), சுகந்தினி (லண்டன்), வசந்தினி (அவுஸ்திரேலியா), மகன் மகிந்தன் (லண்டன்) ஆகியோரும், மற்றும் அன்பு மருமக்கள் பேரப்பிள்ளைகள் சகோதர சகோதரிகள் மச்சான்மார் மச்சாள்மார் பெறா மக்கள் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் கடவுள் அருளால் தேக ஆரோக்கியத்தோடு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

76வது பிறந்தநாளை கொண்டாடும் கே எஸ் வேலாயுதம் ஐயா அவர்களை TRT தமிழ் ஒலியில் பணி புரியும் அனைவரும் நோய் நொடியின்றி பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பிள்ளைகள் சுகந்தினி, நந்தினி, வசந்தினி, மகிந்தன் அனைவருக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்

பகிரவும்...