40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)

தாயகத்தில் பருத்தித்துறை தலைமன்னாரை சேர்ந்த பிரான்ஸ் Strasbourg இல் வசிக்கும் தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் 3ம் திகதி நவம்பர் மாதம் வியாழக்கிழமை அன்று வந்த தங்களது 40 வருட திருமண நன் நாளை 5ம் திகதி நவம்பர் மாதம் சனிக்கிழமை இன்று தங்களது இல்லத்தில் பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுடன் இணைந்து சிறப்பாக கொண்டாடுகின்றார்கள்.
இன்று மாணிக்க விழா ஆண்டை கொண்டாடும் தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகளை வாழ்த்துவோர் : பாரிஸில் வசிக்கும் அன்பு மகள் சங்கீதா, அவுஸ்திரேலியாவில் வசிக்கும் அன்பு மகன் கோபிநாத், Strasbourg இல் வசிக்கும் அன்பு மகள் திவ்யா,அன்பு மருமக்கள் மோகன்,(f)பெர்னிஸ்,ஸ்ரீவக்சன், பேரப்பிள்ளைகள், எழிலன், இலக்கியா, சஹானா, லேயோ, மற்றும் Strasbourg இல் வசிக்கும் அன்புத் தம்பி மனோகரன் மோகனா தம்பதிகள், Mulhouse இல் வசிக்கும் அன்பு நண்பி குடும்பம் பிலிப் நெவிஸ் குடும்பம், மற்றும் தாயகத்தில் வசிக்கும் சகோதர சகோதரிகள்,பெறாமக்கள், மற்றும் உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் தம்பதிகள் தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்று 40வது திருமண நாளை கொண்டாடும் தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகளை TRTதமிழ் ஒலியில் பணி புரியும் அன்பு உறவுகள் தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகிறார்கள்.பிரான்சில் வசிக்கும் பிலிப் நேவிஸ் குடும்பம் மற்றும் மனோகரன் மோகனா குடும்பம்.
அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.
“சுவாசமான திருமண வாழ்வின் 40 வருட நிறைவு நாளில் பூக்கள் கோர்த்து பரிசுகள் தருவதை விட வார்த்தைகள் சேர்த்து நேசத்தை புரிவதில் தான் வாழ்க்கையின் அர்த்தம் ஒளிந்துள்ளது”
அன்பே என்று அழைத்து ஆசைகளை எல்லாம் பட்டியல் இட்டீர்கள்.
இதயங்களை ஈந்து ஈர விழிகளைத் துடைத்தீர்கள்.
உறவுகளை நினைத்து ஊடல்களை மறந்தீர்கள்.
எளிமைக்கு வழி விட்டு ஏழ்மைக்கு உதவினீர்கள்.
ஐயங்கள் அழித்து பலயுகம் கடந்தீர்கள்.
ஓசையின்றி மேம்படுங்கள் .
ஔஷதம் இன்றி வாழ்ந்திடுங்கள்
வாசனை என்பது சில நிமிடம் வரை
வறுமை என்பது சில காலம் வரை
அழகு என்பது வயதுள்ள வரை
உறவு என்பது உயிருள்ள வரை
நகரும் நொடிகளை சேமித்து
ஒற்றை நோக்கத்துக்காய்
எந்நாளும் காதல் செய்து வாழ்ந்திடுங்கள்.
செல்வங்கள் கோடி சேர்த்து
இலக்குகளை அன்பால் கோர்த்து
வாழ்க்கையில் ஆனந்த வெளிச்சம்
தடையின்றி மின்னிட இன் அருள்
இறை துணை எந்நாளும் வழி காட்ட
நலமாய் வளமாய் பெருகி வரும் சொந்தங்களுடன்
வாழையடி வாழையாக
வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.
– நெவிஸ் பிலிப்