Main Menu

34-வது எம்.ஜி.ஆரின் நினைவு தினம்: நினைவிடத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மலர்தூவி மரியாதை!

நம் தமிழகத்தில் தற்போது எதிர்க் கட்சியாக உள்ளது அதிமுக. இவை கடந்த 10 ஆண்டுகளாக ஆளும் கட்சியாக இருந்தது. இந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு விதை போட்டவர் யார் என்றால் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் என்று கூறலாம்.

நடிப்பில் இவர் புரட்சித் தலைவர் என்று மக்களால் அழைக்கப்பட்டு அனைவரின் உள்ளத்தைக் கவர்ந்தார். அதன்பின்னர் அதிமுக கட்சி சார்பில் முதல்வராக இருந்து தொடர்ச்சியாக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார். முதல்வராக இருக்கும்போது உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

அதன்படி டிசம்பர் 24-ஆம் தேதி ஆகிய இன்றைய தினம்தான் எம்.ஜி.ஆரின் உயிர் பிரிந்தது. இந்த நிலையில் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் மரியாதை செலுத்தி வருகின்றனர். எம்.ஜி.ஆரின் 34-வது நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் பன்னீர்செல்வம் மற்றும் பழனிச்சாமி மலர்தூவி மரியாதை செலுத்தினர். ஜெயக்குமார், செல்லூர் ராஜு, பொன்னையன், கே.பி. முனுசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்

பகிரவும்...