Main Menu

24 மணித்தியாலங்களில் 20 பேர் கைது

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது 20 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

குறிப்பாக வெள்ளவத்தை , மாவனெல்லை  மற்றும் கொம்பனித் தெரு ஆகிய பொ லிஸ் பிரிவுகளில் தலா மூன்று பேரும் மிரிஹான மற்றும் தெஹிவளையில் தலா இரண்டு பேரும்  கொள்ளுப்பிட்டி , பண்டாரவளை , காத்தான்குடி , அளுத்கம , புரவசன்குளம் ஆகிய பிரதேசங்களில் தலா ஒவ்வொருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடம் தொடர் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் கடந்த 21 ஆம் உயிர்ப்பு ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலையடுத்து நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தேடுதல்களும் சுற்றிவளைப்புக்களும் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றன.

பகிரவும்...
0Shares