21 வது பிறந்தநாள் வாழ்த்து- செல்வி.தர்சிகா புஷ்பராஜா (19/05/2021)
தாயகத்தில் கிளிநொச்சியை பிறப்பிடமாக கொண்ட சுவிஸ் வலைஸ் மாநிலத்தில் சியோன் நகரில் வசிக்கும் புஷ்பராஜா முத்தமிழ் தம்பதிகளின் செல்வப்புதல்வி தர்சிகா 17ம் திகதி மேமாதம் திங்கட்கிழமை அன்று வந்த தனது 21வது பிறந்தநாளை 19ம் திகதி புதன்கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.
இன்று 21வது பிறந்தநாளை கொண்டாடும் தர்சிகாவை அன்பு அப்பா புஷ்பராஜா, அன்பு அம்மா முத்தமிழ் அன்புத்தம்பிமார் சஞ்சிதன் , எழில் நிலவன், தாயகத்தில் கிளிநொச்சியில் வசிக்கும் அப்பம்மா, அம்மம்மா, செந்தமிழ் பெரியம்மா, உமா பெரியம்மா, மஞ்சுளா பெரியம்மா, ரூபிகா அன்ரி, மற்றும் தாயகத்தில் வசிக்கும் செல்வ நேசன் மாமா குடும்பம் , ரஞ்சன் மாமா குடும்பம், செல்வா மாமா குடும்பம், மற்றும் கிளிநொச்சி பாடசாலை நண்பிகள் வைசிகா, குலசிகா, பிரியா, நிலாசினி, அஜித்தா, தர்சிகா, வினோதா,யாழினி இவர்களுடன் சுவிஸ் வலைஸ் மாநிலத்தில் வசிக்கும் நண்பிகள் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் கிளிநொச்சி மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி அருளோடு எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்
இன்று 21வது பிறந்தநாளை கொண்டாடும் தர்சிகாவை தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்ரிமார் மாமாமார், அன்பு நேயர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் தர்சிகாவின் அன்புத்தம்பிமார் சஞ்சிதன் எழில், நிலவன்
இவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்
21வது அகவையில் கால் பதிக்கும் தர்சிகாவே
தாயக மண்ணின் தனிப்பற்று
தமிழின் மேல் உயிர்ப்பற்று
நேர்த்திசைப்பற்று புலிப்பற்று
நேர்மைப்பெற்றோரின் புவிப்பற்று
தாய்மண் மேல் பாசம் பெற்றவர் பாசம்
தர்சிகாவோடும் தமிழின் வாசம்
வயது இன்று 21
வளர்ந்திடு செல்வம் உயர்வுகள் கண்டு
சொல்லும் செயலும் ஒன்றாய்க் கொண்டு
சூரிய கதிர்போல் ஒளியது கொண்டு
கல்வியில் மேன்மை நிலையது கண்டு
வளரும் நிலையில் வளர்ச்சியைக் கண்டு
சாதனை படைத்து பலர் வேதனை துடைத்து
நாளைய பொழுதை உனதாக்கு
பாரினில் உன்பெயரை உயர்வாக்கு
பைந்தமிழ் மொழியினை வளர்வாக்கு
தினமும் பலரும் உன் புகழ் கூற
திவ்விய உலகம் உனக்கு வெற்றிமாலைகள் சூட
புலம் பெயர் மண்ணில் புதுப்பெண்ணாய்
உயர்ச்சி கொண்டு மகிழ்ச்சி காண்பாய்
எதிர்காலம் எல்லாம் மகிழ்வுடன் வாழ்வாய்
வாழ்க வாழ்க மகிழ்வுடன் வாழ்க
வாழ்க வாழ்க உயர்வுடன் வாழ்க
தர்சிகா செல்வத்தை வாழ்த்தி நிற்கும்
பெற்றோர் சகோதரர்கள்