Main Menu

2022-2023-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் ரூ.36 கோடி மதிப்பீட்டில் இரண்டு ஆண்டில் உயர்தர வசதிகளுடன் கூடிய மத்திய நூலகங்கள் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

2022-2023-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று கூடியது.  நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை  தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்…

* மாநிலங்களின் உரிமைகளுக்காக தி.மு.க. அரசு தொடர்ந்து போராடும்.

* உக்ரைன் போர் காரணமாக பொருளாதார மீட்டெடுப்பு பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

* உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் என்ற திட்டத்தின் மூலம் இதுவரை 10,01,083 மனுக்களுக்கு தீர்வு.

* கூட்டாட்சி அமைப்பை சீர்குலைக்க எடுக்கப்படும் தொடர் முயற்சிகள் வருத்தமளிக்கிறது.

* திராவிட மாடலின் இலக்கணமாக முதல்-அமைச்சர் திகழ்கிறார்.

* வரும் நிதியாண்டில் ரூ.20 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறையை சந்திக்க நேரிடும்,

* தமிழ் மொழியை போற்றி உலகெங்கும் பரவ செய்வதே தி.மு.க. அரசின் முதன்மையான குறிக்கோள்.

* நம் நாட்டின் பன்முக பண்பாட்டை பாசிச சக்திகள் அழிக்க முயல்கின்றன.

* 8 ஆண்டுகளுக்கு பின்னர் அரசின் நிதி வருவாய் பற்றாக்குறை முதன் முறையாக குறைகிறது.

* தந்தை பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 27 மொழிகளில் அச்சிடப்படும்.

* தமிழ் சமுதாயத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.

* அரசு நிலங்களை குத்தகை முறையில் தற்போது உள்ள சிக்கல்களை தீர்க்கவும், எளிமையான முறையில் குத்தகை விடுவதற்கும் விரிவான நில குத்தகை வகுக்கப்படும்.

* அரசு நிலங்களை பாதுகாக்கவும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் சிறப்பு நிதியாக ரூ.50 கோடி ஒதுக்கீடு.

* வானிலையை கணிக்க புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட கட்டமைப்பை அரசு உருவாக்கும். இதற்கு 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* வெள்ள தடுப்பு பணிகளுக்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு. போதை பொருட்களை ஒழிக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

* சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களுக்காக ரூ.4,714 கோடி ஒதுக்கீடு.

* சமூக வலைத்தளங்களில் ஏற்படும் குற்றங்களை தடுக்க சமூக ஊடக சிறப்பு மையம் அமைக்கப்படும்.

* ஏழு வணிக நீதிமன்றங்கள் அமைக்க நிதி இந்த நிதியாண்டில் ஒப்புதல்.

* 4131 கோடி ரூபாய் கூட்டுறவுத்துறைக்காக ஒதுக்கீடு.

* 7500 கோடி ரூபாய் பொது விநியோகத்திட்டத்தை செயல்படுத்த முதற்கட்டமாக ஒதுக்கீடு.

* வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* பாசனத்திற்காக நீரை தங்குதடையின்றி வழங்கவும், காவிரி பாசன அமைப்புகளை புனரமைத்தல் பணிகளுக்காக ரூ.3,384 கோடி ஒதுக்கீடு.

* காவேரி பாசன பகுதிகளில் நீர் வழித்தடம் மற்றும் சீரமைப்பிற்கு ரூ.3384 கோடி ஒதுக்கீடு. தமிழ்நாடு பசுமை காலநிலை மாற்ற அமைப்பை அரசு உருவாக்கும்.

* சென்னைக்கு அருகில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும்.

* விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

* விலங்குகளை பராமரிக்க அரசு சாரா நிறுவனங்களுக்கு உதவி செய்ய வள்ளலார் காப்பக திட்டம் உருவாக்க ரூ.20 கோடி ஒதுக்கீடு.

* தமிழ்நாட்டில் 7 இடங்களில் அகழாய்வு, 2 இடங்களில் தல ஆய்வு செய்யப்படும்.

* தொல்லியல் ஆய்வுகளுக்காக ரூ.7 கோடி ஒதுக்கீடு.

* விழுப்புரம், ராமநாதபுரத்தில் ரூ.10 கோடி செலவில் அருங்காட்சியகம்.

* நவீன முறையில் நில அளவை பணிகளை மேற்கொள்ள ரோவர் இயந்திரம் வாங்க ரூ.15 கோடி ஒதுக்கீடு.

* தமிழ்வளர்ச்சி துறைக்கு பட்ஜெட்டில் ரூ.82.86 கோடி நிதி ஒதுக்கீடு. ‘இல்லம் தேடி கல்வி திட்டம்’ நாட்டிற்கே முன்னோடியாகத் திகழ்கிறது.

* தமிழகம் முழுவதும் உள்ள பழமையான அரசு கட்டடங்களை சீரமைக்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு

* குறுவை சாகுபடிக்காக டெல்டாவைச்சேர்ந்த 10 மாவட்டங்களில் 4,694 கி.மீ. கால்வாய்கள் தூர்வார ஒப்புதல்.

* 15 மாவட்டங்களில் முன் மாதிரி பள்ளிகள் தொடங்கப்படும்.

* டெல்டா கடைமடை பகுதிகள் வரை தூர்வாரும் பணிகளுக்கு ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு.

* இத்திட்டம் வரும் நிதியாண்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இதற்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* புத்தகக் காட்சிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும்.

* ஆண்டிற்கு 4 இலக்கிய திருவிழாக்கள் நடத்தப்படும்.

* அறிவுசார் நகரம் உருவாக்கப்படும்.

* ஆராய்ச்சிப் பூங்காக்கள் நிறுவ ஊக்குவிக்கப்படும்.

* அரசு கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளின் கட்டமைப்பை மேம்படுத்துவது அரசின் கடமை.

* அடுத்த 5 ஆண்டுகளில் 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டம்.

* அரசு பள்ளிகளை தரம் உயர்த்த பேராசிரியர் அன்பழகன் பெயரில் புதிய திட்டம்.

* வடசென்னையில் விளையாட்டு வளாகத்தை அரசு உருவாக்கும்.

* தமிழ்நாடு ஒலிம்பிக் தங்கப்பதக்க தேடல் திட்டம்.

* 19 அரசு மருத்துவமனைகளை, புதிய மாவட்ட தலைநகர் மருத்துவமனைகளாக மேம்படுத்த அரசு முடிவு.

* நாட்டில் மனநல மருத்துவர் பயிற்சி, மன நோய்க்கு சிகிச்சை கட்டமைப்பைப் பலப்படுத்துவது இன்றியமையாதது.

* கீழ்ப்பாக்கத்தில் உள்ள மாநில மருத்துவமனை மனநல மாற்றம் உயர்ந்த அமைப்பாக மேம்படுத்திட அரசு திட்டமிட்டுள்ளது.

* முதற்கட்டமாக 40 கோடி ரூபாய் வழங்கப்படும்.

* ரூ.125 கோடி செலவில் புதிய நூலகங்கள் அமைக்கப்படும்.

* தமிழக பட்ஜெட்டில் காவல்துறைக்கு ரூ.10,285 கோடி ஒதுக்கீடு.

* சென்னை ஆர்.கே.நகரில் புதிய விளையாட்டு வளாகம் ரூ.10 கோடியில் அமைக்கப்படும்.

* டான்செம் நிறுவனத்திற்கு ரூ.30 கோடி நிதி உதவி.

* சத்துணவுத்திட்டத்திற்கு ரூ.1949 கோடி ஒதுக்கீடு.

* சமூக நலத்துறைக்கு ரூ.5922.40 கோடி ஒதுக்கீடு.

* மாணவன் நல விடுதிகளில் ஆராய்ந்து சுகாதாரம், உணவு, தரம் பாதுகாப்பு கண்காணிப்பு ஆகியவற்றை மறுசீரமைக்க தேவையான பரிந்துரைகளை வழங்க உயர் மட்ட குழு.

* முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்திற்கு ரூ.1,547 கோடி நிதி ஒதுக்கீடு.

* முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு மருத்துவ திட்டத்திற்கு ரூ. 817 கோடி நிதி ஒதுக்கீடு.

* 5.6 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சென்னையை போன்று புத்தக காட்சி நடத்தப்படும்.

* தமிழர்களின் மரபை கொண்டாட கூடிய வகையில் 4 இலக்கிய திருவிழாக்கள் நடத்தப்படும்.

* புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் ரூ.36 கோடி மதிப்பீட்டில் இரண்டு ஆண்டில் உயர்தர வசதிகளுடன் கூடிய மத்திய நூலகங்கள் அமைக்கப்படும்.

* உயர்தர வசதிகளுடன் கூடிய மத்திய நூலகங்கள் அமைக்கப்படும்.

* மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ. 17,901 கோடி நிதி ஒதுக்கீடு.

* அரசு பள்ளிகளில் 18,000 வகுப்பறைகள் கட்டப்படும்.

* கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ. 1000 கோடி.

* சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு.

* கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பராமரிப்புக்காக ரூ.450 கோடி ஒதுக்கீடு.

* மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.838.01 கோடி ஒதுக்கீடு.

* 6 புதிய கூட்டுறவு குடிநீர் திட்டங்கள் வரும் நிதியாண்டில் செயல்படுத்தப்படும்.

* மீஞ்சூர் முதல் வண்டலூர் வரை 62 கிலோமீட்டர் தூரத்தில் இரு புறங்களிலும் பெருவழி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும். வெளி வட்ட சாலையின் இருபுறமும் உணவகம் உள்ளிட்ட கடைகளும் உருவாக்கப்படும்.

* இலவச வேளாண் மின் இணைப்புகளுக்கு முன்னுரிமை.

* இதுவரை 75,765 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

* எஞ்சிய இணைப்புகளும் விரைவில் வழங்கப்படும்.

* துறைமுகம் மதுரவாயல் உயர்மட்ட சாலை திட்டத்துக்கு ரூ.5,770 கோடி ஒதுக்கீடு.

பகிரவும்...