Day: March 23, 2021
துயர் பகிர்வோம் – அமரர். ஜெயந்தன் ஜெகரூபநாதன்
தாயகத்தில் ஏழாலையை பிறப்பிடமாகவும் டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜெயந்தன் ஜெகரூபநாதன் 10ம் திகதி மார்ச் மாதம் புதன்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம் அன்னார் ஜெகரூபநாதன் கமலாதேவி தம்பதிகளின் அன்பு மகனும் நபினா சுரேகா ஆகியோரின் அன்பு சகோதரனும்,மேலும் படிக்க...
67-வது தேசிய விருதுகள் அறிவிப்பு
“அசுரன்” திரைப்படத்துக்காக நடிகர் தனுஷ் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளார். சிறந்த உறுதுணை நடிகருக்கான விருதை ’சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்த விஜய் சேதுபதி பெற்றுள்ளார். ’கேடி (எ) கருப்புதுரை’ திரைப்படத்தில் நடித்த நாக விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கானமேலும் படிக்க...
வருகிற ஏப்ரல் 6-ந் தேதியை சரித்திர நாளாக மாற்றுங்கள்- கமல்ஹாசன் பேச்சு
தமிழகத்தை ஆளும் இரு கட்சியினருக்குமே ஊழலை தவிர வேறு எதுவும் தெரியாது என்று கமல்ஹாசன் பேசியுள்ளார். திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் திருவெறும்பூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசியதாவது:- திருச்சிமேலும் படிக்க...
தீர்மானத்தை வழக்கம் போல நிராகரிப்பதாக இலங்கை அறிவிப்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட புதிய தீர்மானத்தை வழக்கம்போல நிராகரிப்பதாக இலங்கை அறிவித்துள்ளது. இதேவேளை இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பான ஐ.நா. தீர்மானத்திற்கு எதிராக சீனா வாக்களித்துள்ளது. மேலும் இந்த பிரேரணை அரசியல்மேலும் படிக்க...
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் மாநாடு மெய்நிகர் மாநாடாக நடைபெறும்!
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் மாநாடு மெய்நிகர் மாநாடாக நடைபெறுமென ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவரான சார்லஸ் மைக்கேலின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் டுவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர்களாகமேலும் படிக்க...
நைஜரில் ஆயுதக் குழுக்கள் கிராமங்களில் புகுந்து துப்பாக்கிசூடு: 40பேர் உயிரிழப்பு!
நைஜரின் எல்லையான மாலிக்கு அருகிலுள்ள கிராமங்களில் நடந்த தாக்குதல்களில் 40பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்லாமிய அரசு மற்றும் அல்-கொய்தாவுடனான தொடர்புகளைக் கொண்ட ஆயுதக் குழுக்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நைஜர், புர்கினா பாசோ மற்றும் மாலியின் எல்லைகள் ஒன்றிணைக்கும் ஒரு ஃப்ளாஷ் பாயிண்ட்மேலும் படிக்க...
அவுஸ்ரேலியாவில் கடும் வெள்ளம்: ஆயிரக் கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்!
அவுஸ்ரேலியாவில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். சிட்னியின் மேற்கே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், அங்கு இதுவரை 18,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் 15,000பேர் செவ்வாய்க்கிழமை வெளியேற்ற அறிவிப்பில் இருந்தனர். நியூ சவுத் வேல்ஸின் சில பகுதிகள்மேலும் படிக்க...
இலங்கைக்கு எதிரான தீர்மானம் பிரித்தானியாவினால் தாக்கல்
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பான தீர்மானம் பிரித்தானியாவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கனடா, ஜேர்மனி, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகள் சார்பாக குறித்த பிரேரணை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் ஒருமித்த கருத்து மூலம்மேலும் படிக்க...
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு -மருத்துவ வல்லுநர்கள் குழுவுடன் தலைமை செயலாளர் ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மருத்துவ வல்லுநர்கள் குழுவுடன் தலைமை செயலாளர் ராஜிவ் ரஞ்சன் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் சடுதியாக அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்துமேலும் படிக்க...
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் – தம்பிதுரை
ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்க வேண்டும் என அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், இலங்கையில் தமிழர்களின் வாழ்வாதாரத்தை உறுதிமேலும் படிக்க...
இலங்கைக்கு எதிரான ஐ.நா. ஆணையாளரின் மதிப்பீட்டை ஆதரிப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவிப்பு
இலங்கையில் பொறுப்புக்கூறல் செயன்முறைகளுக்காக மேலும் கால அவகாசம் வழங்குவது சாத்தியமான விடயமல்ல என்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் மதிப்பீட்டை ஆதரிப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்றுமேலும் படிக்க...
அமெரிக்காவில் பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச் சூடு – 6 பேர் வரையில் உயிரிழப்பு
அமெரிக்காவில் பல்பொருள் அங்காடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலராடோ மாகாணத்தில் போல்டர் என்ற இடத்தில் செயற்பட்டு வரும் கிங் சூப்பர் என்ற பல்பொருள் அங்காடியிலேயே இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றது. குறித்த பல்பொருள் அங்காடியில்மேலும் படிக்க...