Main Menu

நைஜரில் ஆயுதக் குழுக்கள் கிராமங்களில் புகுந்து துப்பாக்கிசூடு: 40பேர் உயிரிழப்பு!

நைஜரின் எல்லையான மாலிக்கு அருகிலுள்ள கிராமங்களில் நடந்த தாக்குதல்களில் 40பேர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்லாமிய அரசு மற்றும் அல்-கொய்தாவுடனான தொடர்புகளைக் கொண்ட ஆயுதக் குழுக்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நைஜர், புர்கினா பாசோ மற்றும் மாலியின் எல்லைகள் ஒன்றிணைக்கும் ஒரு ஃப்ளாஷ் பாயிண்ட் மண்டலம் ‘முத்தரப்பு பகுதி’ என்று அழைக்கப்படும் தில்லாபெரி பகுதியைத் தஹோவா பிராந்தியத்தில் மூன்று கிராமங்களில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இன்டசாயீன், பக்கோரேட் மற்றும் விஸ்டேன் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், ஆயுதமேந்தியவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜனவரி 2ஆம் திகதி, தில்லாபரின் மங்கைஸ் மாவட்டத்தில் இரண்டு கிராமங்கள் மீதான தாக்குதல்களில் 100பேர் கொல்லப்பட்டனர். இந்த படுகொலை, நைஜரின் வரலாற்றில் மிக மோசமான ஒன்றாகும்,

பகிரவும்...