Main Menu

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் மாநாடு மெய்நிகர் மாநாடாக நடைபெறும்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் மாநாடு மெய்நிகர் மாநாடாக நடைபெறுமென ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவரான சார்லஸ் மைக்கேலின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் டுவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர்களாக உள்ள நாடுகளின் ஜனாதிபதிகள் மற்றும் தலைவர்கள் கலந்து கொள்ளும் மாநாடு, இந்த வார இறுதியில் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய தினங்களில் ஜேர்மனியின் பிரசல்ஸ் நகரத்தில் நடைபெறுவதாக இருந்தது.

மாநாட்டின் செயற்திட்டங்களில் கொரோனா குறித்த விவாதங்கள் முக்கியத்துவம் பெரும் அதேநேரத்தில் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து கொரோனா தடுப்பூசி பிரசாரத்தை முன்னெடுப்பது மற்றும் ரஷ்யா, சீனா உடனான உறவுகளைப் பராமரிப்பது குறித்தும் பேச்சுக்கள் நடைபெறும் என்று தெரிகிறது.

பகிரவும்...