Main Menu

ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்தைச் செலுத்துவதில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்து!

ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்தைச் செலுத்துவதில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து குழந்தைகளுக்கான சர்வதேச தன்னார்வ அமைப்பான யுனிசெஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா தொற்று நோய் காரணமாக உலகெங்கிலும் உள்ள குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஆசிரியர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பு மருந்தைச் செலுத்துவதன் மூலம் கல்வியில் ஏற்பட்டுள்ள பாதிப்பைச் சரி செய்யலாம்.

சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும்“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக குழந்தைகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாக யுனிசெஃப் முன்னரே எச்சரிக்கை விடுத்தது.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது.

உலக நாடுகள் அனைத்தையும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில் அமெரிக்கா, பிரித்தானியா, சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்ட சோதனையில் வெற்றி பெற்றுள்ளன.

பகிரவும்...