Main Menu

19 இல் உள்ள சில நல்ல விடயங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் – டிலான் பெரேரா

19 இல் உள்ள சில நல்ல விடயங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்திலுள்ள குறைகளை நிவர்த்தி செய்வதற்காக 20ஆவது திருத்தச்சட்ட மூலம் கொண்டு வரப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

19 இல் உள்ள சில நல்ல விடயங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அதேபோல் 13ஆவது திருத்தச்சட்டத்திலும் நல்ல விடயங்கள் உள்ளன.

எனவே, புதிய அரசியலமைப்பை இயற்றும்போது மேற்படி சரத்துகளில் உள்ள நல்ல விடயங்களை உள்வாங்கவேண்டும். அவ்வாறு உள்வாங்கி புதிய அரசியலமைப்பை உருவாக்கினால்தான் அது சிறப்பாக இருக்கும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...