Main Menu

அமெரிக்காவுக்கு மீண்டும் சுதந்திர தேவி சிலை பரிசு

ஹட்சன் ஆற்றின் துறைமுகத்தில் உள்ள லிபர்ட்டி தீவில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவப்பட்டுள்ள சுதந்திர தேவி சிலை 305 அடி உயரமும், 204.1 டன் எடையும் கொண்டது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக புகழ்பெற்ற சுதந்திர தேவி சிலை அமைந்துள்ளது.

ஹட்சன் ஆற்றின் துறைமுகத்தில் உள்ள லிபர்ட்டி தீவில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவப்பட்டுள்ள சுதந்திர தேவி சிலை 305 அடி உயரமும், 204.1 டன் எடையும் கொண்டது.

அமெரிக்கா சுதந்திரம் அடைந்து நூறாண்டு ஆன போது பிரான்ஸ் நாடு சுதந்திர தேவி சிலையை வடிவமைத்து அமெரிக்காவுக்கு பரிசாக வழங்கியது.

கப்பல் மூலம் அனுப்பப்பட்ட சிலை 1886-ம் ஆண்டு அக்டோபர் 28-ந் தேதி அமெரிக்க மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

இந்த நிலையில் அமெரிக்காவுக்கு பிரான்ஸ் மற்றொரு சுதந்திர தேவி சிலையை செய்து பரிசாக அனுப்பி இருக்கிறது. அமெரிக்காவின் சுதந்திர தினம் வருகிற ஜூலை 4-ந்தேதி நடைபெறுகிறது.

இதையடுத்து மினி சுதந்திர தேவி சிலையை பிரான்ஸ் தயாரித்தது. அந்த சிலை 3 மீட்டர் (கிட்டத்தட்ட 10 அடி) உயரம் கொண்டது. அந்த புதிய சுதந்திர தேவி சிலை நேற்று பிரான்சில் இருந்து கப்பலில் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டது.

புதிய சுதந்திர தேவி சிலை அமெரிக்க சுதந்திர நாளான ஜூலை 4-ந் தேதி நியூயார்க் நகரை சென்றடையும். எல்லீஸ் தீவில் நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டத்தில் சிலை காட்சிப்படுத்தப்படும்.

பகிரவும்...
0Shares