மௌலவி ஒருவர் கைது!
அடிப்படைவாத கருத்துக்களை இணையதளத்தில் பதிவேற்றியமை தொடர்பில் சந்தேகத்தின்பேரில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மக்கா சென்று நாடு திரும்பிய நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்றைய தினம் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முஹைதீன் கனி சேகு முனாஜித் என்ற 47 வயதுடைய சந்தேகத்துக்குரியவர், மக்காவுக்கு யாத்திரிகர்களை அழைத்துச் செல்லும் ஒருவர் என்பதுடன், பள்ளிவாசல்களில் போதனைகளை நிகழ்த்துபவர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேகத்துக்குரியவர், நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர், நாளை மறுதினம்வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.