Main Menu

120 ஆவது நாளை எட்டும் விவசாயிகளின் போராட்டம்!

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி எல்லையில் இன்று (புதன்கிழமை) 119 ஆவது நாளாக விவசாயிகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

விவசாயிகளின் போராட்டம் காரணமாக டெல்லி – ஹரியாணா மாநிலங்களின் முக்கிய எல்லைகள் தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளன.

இதன்காரணாக தேசிய நெடுஞ்சாலைகளுக்கு 814 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதா மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்துள்ளார்.

இதற்கிடையில் வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை போராட்டங்கள் தொடரும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில், குறித்த பேச்சுவார்த்தைகள் தோல்வியை தழுவியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...