Main Menu

அமெரிக்கா, பிரித்தானியாவால் 2015 இல் கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கு முழு நாடுகளும் ஆதரவளித்தன – மங்கள

தங்களுடைய எதேச்சதிகாரங்களில் இடம்பெற்ற அட்டூழியங்களை மறைப்பதற்காக இந்த முறை 11 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐ.நா.வில் இலங்கையில் நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பான தீர்மானம் 11 மேலதிக வாக்குகளால் நேற்று (செவ்வாய்க்கிழமை) நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள அவர், 2015 ஆம் ஆண்டில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறை அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவினால் முன்மொழியப்பட்டது.

இலங்கையின் இணை அனுசரணையுடன் குறித்த பிரேரணை கொண்டுவரப்பட்டபோது சீனா, ரஷ்யா உட்பட முழு உலகமும் தங்களுக்கு ஆதரவாக அணிதிரண்டதாகவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் தங்களுடைய எதேச்சதிகாரங்களில் இடம்பெற்ற அட்டூழியங்களை மறைப்பதற்காக இந்த முறை 11 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக “இல்லை” என வாக்களித்துள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...